Ticker

6/recent/ticker-posts

நடைபாதைகளில் புகைக்கும் பழக்கம் - புதிய கட்டுப்பாடுகள் வருமா?


நடைபாதைகளில் நடந்துகொண்டே புகைப்பதால் மற்ற பாதசாரிகள் பாதிக்கப்படுவதைக் குறைக்கப் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் லிப் ஃபோங் (Dennis Tan Lip Fong) இதுகுறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரிடம் கேள்வி கேட்டார்.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புகைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது, நடந்துகொண்டே புகைப்பதால் ஏற்படும் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளைத் தேசிய சுற்றுப்புற அமைப்பு பரிசீலிக்குமா என்று அவர் கேட்டார்.

அதற்குப் பதில் தந்த அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu), மற்றவர் புகைப்பதால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தற்போது 49,000க்கும் மேற்பட்ட பொது இடங்களில் புகைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.

கூரையுள்ள அல்லது நிலத்தடி நடைபாதைகளிலும் குடியிருப்புக் கட்டடங்களின் பொதுப் பகுதிகளிலும் புகைக்குத் தடை உள்ளது.

அந்த இடங்களில் நடந்துகொண்டே புகைப்பவர்கள் பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.

seithi


 


Post a Comment

0 Comments