Ticker

6/recent/ticker-posts

முற்றத்தில் மலர்ந்தவள் !


முற்றத்தில் மலர்ந்த உன் அழகை,
முதுமை வந்தாலும் ரசிப்பேன் நான்…
முள்ளோடு நீ இருந்தாலும்,
தள்ளி நின்றே நேசிப்பேன் நான்…

உலகம் போற்றும் அழகி நீ அல்ல,
ஆனால் எனக்கென பிறந்தவள் நீ…
ஆயிரம் முகங்கள் கடந்தாலும்,
என் மனம் தேடும் முகம் நீ…

கயல்விழி பார்வையில் ஒரு நொடி போதும்,
காலம் முழுவதும் என்னை சிறைபிடிக்க…
உன் புன்னகையின் ஒரு துளி போதும்,
என் வாழ்வின் சோகம் மறந்திட…

நான் நினைத்த கனவுகள் கலைந்தாலும்,
நான் நடந்த பாதைகள் மறைந்தாலும்,
என் நெஞ்சில் பதிந்த உன் நினைவு மட்டும்,
என்றும் அழியாமல் வாழும்…

தொலைவில் நீ இருந்தாலும்,
தொடர்ந்து உன்னை நினைப்பேன்…
உன் நிழல் கூட கிடைக்காத நேரத்திலும்,
உன் நினைவோடு வாழ்ந்திருப்பேன்…

வாழ்க்கை முடியும் நாள்வரை,
மாறாத காதலாய் 
இருப்பேன்…
முற்றத்தில் மலர்ந்த அந்தப் பூவாய்,
என் மனதில் என்றும் மலர்ந்திருப்பாய்… 

ஜெ.ஜெயராணி


 


Post a Comment

0 Comments