Ticker

6/recent/ticker-posts

நம்பிக்கை ஏற்படும் வகையில் பகிடிவதை விசாரணைகள்


பகிடிவதையை கட்டுப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு நெறிமுறை ரீதியான பொறுப்புண்டு

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றமை உறுதி செய்யப்பட வேண்டுமென, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் உயர் கல்வித் துறைக்கான உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

உயர் கல்வித் துறையில், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை கட்டுப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு நெறிமுறை ரீதியான பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.பகிடிவதைக்கு உள்ளாகும் மாணவர்கள், தமது முறைப்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைச் செயல்முறைகள் மீது நம்பிக்கை கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

thinakaran


 


Post a Comment

0 Comments