Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-56


குறள் 273:

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

இழிந்தோர்கள் நல்லவர்போல் வாழ்தல், பசுக்கள் புலித்தோ லணிந்துமேய்தல் போல்.

குறள் 274:

தவமறைத் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

துறவி ஒழுக்கமின்றி வாழ்வது, வேடன் மறைந்திருந்துப் புள்பிடித்தல் போல்.

குறள் 275:

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.

பற்றில்லை என்றேதான் பொய்சொல்லி வாழ்வோரைச் சுற்றும் துயரங்கள் சூழ்ந்து.

குறள் 276:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்.

வஞ்சகரும், பற்றை விடாமல் துறவியைப்போல் இங்கே நடிப்பவரும் ஒன்று.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments