
ஸ்மித் மச்சர் (Smit Machchhar)...
கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், 174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி!
உலகமே நோக்குகிறது... பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
இஸ்ரேல் நோக்கிச் சென்ற flydubai விமானத்தின் கேப்டன் மச்சர்.
அவரை நடுவானில் துணை விமானி கத்தியால் குத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர். விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் விமானி அறையில் கிடந்த மச்சர், அந்த நிலையிலும் கதவைத் திறக்கும் அமைப்பை இயக்கினார். இதனால் பயணிகளும் விமானப் பணியாளர்களும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய துணை விமானியைக் கட்டுப்படுத்தினர்.
அதே விமானத்தில் பயணிகளாக இருந்த இரண்டு flydubai விமானிகள், விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் தரையிறக்க உதவினர். அங்குள்ள மருத்துவமனையில் மச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானியாக வேண்டும் என்பது மச்சரின் சிறுவயதுக் கனவு அல்ல. மும்பையைச் சேர்ந்த அவர் குடும்பத்தின் துணி உற்பத்தித் தொழிலைத் தொடர நினைத்தார். அதற்கான படிப்பில் சேர்ந்தார்.
19 வயதில் நடந்த விமானத் துறை கருத்தரங்கு ஒன்றுக்குப் பிறகு விமானியாக முடிவு செய்தார்.
நியூசிலந்தில் பயிற்சி பெற்ற அவர், SpiceJet நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினார். 2022இல் flydubai-யில் சேர்ந்தார்.
சுமார் 15 ஆண்டுகளில் 9,750 மணி நேரம் விமானங்களை இயக்கியுள்ளார் மச்சர்.
சில மருத்துவ அவசரங்களுக்காக விமானத்தைத் திசை திருப்பிய அனுபவம் அவருக்கு உண்டு.
“விமானம் தாமதமாவது பிரச்சினையல்ல; பயணிகள் பாதுகாப்பாக வெளியே வருவதுதான் முக்கியம்,” என்று முன்பு ஒருமுறை மச்சர் கூறியிருந்தார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments