
போலந்தில் ஒரு போராட்டம்.
அணிவகுத்தது மனிதர்கள் அல்ல.
30 இயந்திர மனிதக் கருவிகள்.
அவை கொடிகள் ஏந்தின, முழக்கமிட்டன.
செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாடுகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
போராட்டத்திற்கு Democratism எனும் இயக்கம் ஏற்பாடு செய்தது.
அந்த இயக்கம், செயற்கை நுண்ணறிவும் இயந்திர மனிதக் கருவிகளும் ஊழியர் அணியை எவ்வாறு பாதிக்கின்றன என்ற விவாதத்தைத் தொடங்க விரும்புகிறது.
"வேலையிடங்களைப் பாதுகாக்கவேண்டும்", "விதிகளுக்கான நேரம் இது" என்று இயந்திர மனிதக் கருவிகள் மின்னிலக்க விவகாரங்கள் அமைச்சுக்கு வெளியே ஆர்ப்பரித்தன.
அறிவுசார்ந்த வேலைகளில் மனிதர்களுக்குப் பதிலாக இயந்திர மனிதக் கருவிகளும் செயற்கை நுண்ணறிவும் கொண்டுவரப்படலாம் என்பதை எடுத்துக்கூற விரும்பியதாக ஏற்பாட்டாளர் கிரிகோர்ஸ் குலிஸ் (Grzegorz Kulis) கூறினார்.
ஊழியர்களைப் பாதுகாக்க விதிகளும் கட்டுப்பாடுகளும் இருப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
வித்தியாசமான போராட்டம் கவனத்தை ஈர்க்க மட்டும் அல்ல.
இயந்திர மனிதக் கருவிகளின் ஆற்றல்களைக் காட்டவும் அதன் மூலம் நிலைமை எவ்வளவு அக்கறைக்குரியது என்பதை உணர்த்தவும் அந்த முடிவு என்று கூறப்பட்டது.
செய்தி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments