
ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த, துபாய் - அபூதாபியிடையேயான பிரமாண்ட 'எதிஹாத்' ரயில் சேவை செப்தம்பர் 30ம் திகதி காலை 6:14 மணிக்கு அல் யாலாயிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது; சரியாக 64 நிமிடங்களில் அபூதாபி முகமது பின் சயீத் நகரை அடைந்த ரயில் மறுபடி அங்கிருந்து காலை 7.43க்கு புறப்பட்டு 8.47க்கு துபாயை வந்தடைந்தது.
அல் யாலாயிஸ் ரயில் நிலையத்திலிருந்து அபூதாபியிலுள்ள முகமது பின் சயீத் நகர் வரை நெரிசல் தொல்லை இல்லாமல் இனிமேல் வெறும் 64 நிமிட நேரத்தில் கெத்தாகவும், வசதியாகவும் பயணம் செய்யலாம்!
நவீன சொகுசு வசதிகளுடன் தினமும் 10 ரயில் சேவைகள் இயக்கப் படப்போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு ரயில் பயணத்திலும் 400 பேர் செல்லலாம். இதுமுதல் இரு நகரங்களுக்குமிடையேயான பயணம் அதிவேகமாகவும், மிகவும் எளிதாகவும் மாறப்போகின்றமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும்!
எதிஹாத் ரயில் பயணத்தின்போது, புஜைரா சுரங்கப்பாதை வழியாக செல்லும் மேம்பட்ட பொறியியல் அமைப்பு முக்கியமானதாகும்; அதனால், பயணத்தின்போது புஜைரா மலைகள், பண்ணைகள் மற்றும் கிராமப்புற காட்சிகளை சிறப்பாகக் காணக் கூடியதாக இருக்கும்.
ரயில் பயணத்தின்போது, இலவச Wi-Fi, USB சார்ஜிங் போர்ட்கள், பவர் சொக்கெட்டுகள், பொதி அடுக்கிகள், சூரிய மறைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.
சில பெட்டிகளில் குடும்பங்கள் மற்றும் குழுக்கள் ஒன்றாக நேருக்கு நேர் அமரக் கூடிய இருக்கை வசதிகளும் உள்ளன.

ரயிலில் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி நழுவுக் கதவுகள் மற்றும் தெளிவான இருக்கை எண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Uber மற்றும் Careem செயலிகள் மூலம் ரயில் நிலையங்களிலிருந்து டெக்சி சேவைகள் இணைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
11 நகரங்களை இணைக்கும் இப்புதிய பயணிகள் ரயில் சேவையின் மொத்த ரயில் வலையமைப்பு சுமார் 900 கி.மீ. ஆகும்.
வாகனத்தில் நெடுஞ்சாலைப் பயணத்தில் 2 மணி நேரங்கள் சுருங்கி, நெரிசல் இல்லாமல் அமைதியாக பயணித்து, நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தலாம்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments