Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 17


இன்னா நாற்பது -31.

பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை.

விளக்கம்:
  • நரம்புகள் சரியில்லாத யாழின் இசை துன்பமாகும்.
  • வழிகாட்டுதல் இல்லாத மனிதனின் நடத்தை துன்பமாகும். 
  • தாளம் இல்லாத மத்தள இசை கேட்பது துன்பமாகும். 
  • நற்பண்பு இல்லாதவர்களைப் பகைத்துக் கொள்வது துன்பமாகும்.
இன்னா நாற்பது -32.

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல்.

விளக்கம்:
  • தனது வாழ்க்கையையும், நலத்தையும் பேணாமல் இருப்பது துன்பமாகும். 
  • ஒருவன் முகத்திற்கு முன்னால் பேசாமல், பின்னால் அவதூறாகப் பேசுவது துன்பமாகும். 
  • நற்பண்பு இல்லாதவர்களுடன் நட்பு பேணுவது துன்பமாகும். 
  • செழிப்பாக வாழ்ந்தவர்கள், நிலை தாழ்ந்து போவது துன்பமாகும்.
(தொடரும்)

 


Post a Comment

0 Comments