Ticker

6/recent/ticker-posts

கோதுமை வெல்லப் பிட்டு-கலா சமையல்


தேவையானவை

கோதுமை மா
வெல்லம்
தேங்காய்ப் பூ
ஏலக்காய் பொடி

செய்முறை

கோதுமை மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் கொதிக்கும் நீர் சேர்த்து பிட்டு பதத்திற்கு குழைத்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லம், ஏலக்காய் பொடி, தேங்காய்ப் பூ ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து தயாரிக்கவும்.

பிட்டுக் குழாயில் முதலில் சாதாரண தேங்காய்ப் பூ சிறிது போட்டு, அதன் மேல் மாவு, பின்னர் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூ என அடுக்கி நிரப்பவும்.

சுமார் 15 நிமிடங்கள் அவித்து இறக்கவும்.

இளம் சூட்டில் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

1 Comments

  1. நன்றிகள் அண்ணா

    ReplyDelete