Ticker

6/recent/ticker-posts

மரண ஊசி செலுத்தியும் நின்றுபோகாத இதயம்


அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக்கிற்கு இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் அவரது இதயம் தொடர்ந்து துடித்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

50 வயதான கிறிஸ்டா பைக்கிற்கு பென்டோபார்பிட்டல் மருந்து இருமுறை செலுத்தப்பட்டதாகவும், அதன் பின்னரும் அவர் உயிருடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மரண தண்டனையை நிறுத்தி மருத்துவச் சிகிச்சை வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் அவசர மனுவைத் தாக்கல் செய்தனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது பைக் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவரது இதயம் தொடர்ந்து துடித்ததுடன் குறட்டை போன்ற சத்தமும் கேட்டதாகவும் சட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். மரண ஊசி செலுத்தும் நடைமுறையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, எதிர்பார்த்த அளவுக்கு மருந்து அவரது உடலில் சென்றிருக்காமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்த வழக்கில் கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, அவரது மரண தண்டனையை நிறுத்துமாறு சட்டக் குழு கோரியிருந்தது.

எனினும், கீழமை நீதிமன்றத்தின் தற்காலிகத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டென்னசி மாகாண மரண தண்டனைப் பட்டியலில் இருந்த ஒரே பெண்ணாக கிறிஸ்டா பைக் இருந்த நிலையில், மரண ஊசி செலுத்தும் நடைமுறை தோல்வியடைந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments