
இந்தோனேசியாவில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ காரணமாக, அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் எல்லை கடந்த புகைப் மூட்டம் அதிகரித்து, காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவடைந்துள்ளது.
இந்தோனேசியாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை காலை காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் 'ஐ.க்யூ.ஏர்' (IQAir) கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, காற்றுத் தரக் குறியீடு 179 ஆக பதிவாகி, சுகாதாரமற்ற நிலையை எட்டியுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான காட்டுத்தீ பரவிய சூழலில், குறிப்பாக போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இக்காட்டுத்தீ வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்தோனேசிய வனத்துறை அமைச்சர் ராஜா ஜூலி அந்தோணி எச்சரித்துள்ளார். இந்த எல்லை கடந்த புகை மூட்டத்தின் காரணமாக அண்டை நாடான மலேசியாவிலும் காற்றுத் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments