
உலகளவில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், 'PJ.2.1' என்ற புதிய கோவிட்-19 உருமாறிய வைரஸ் (COVID-19 Variant) அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருவது மக்களிடையேயும் சுகாதார வல்லுநர்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
SARS-CoV-2 வைரஸின் JN.1 குடும்பத்தைச் சேர்ந்த இந்த 'PJ.2.1' உருமாறிய வைரஸ், முதன்முதலாக கடந்த மே மாதம் கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அக்டோபர் -இல் வெளிவந்த ஆய்வுகளின்படி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதன் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்டாரியோவில் எடுக்கப்பட்ட கோவிட் மாதிரிகளில் 25.2% இந்த புதிய வகையைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸின் ஸ்பைக் புரோட்டீனில் (Spike Protein) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இது மனித செல்லின் ACE2 ஏற்பிகளுடன் மிக வேகமாகப் பிணைந்து பரவும் திறன் கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது முந்தைய உருமாறிய வைரஸ்களை விடக் கடுமையான நோயையோ அல்லது அதிக ஆபத்தையோ ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.
மேலும், வழக்கமான தடுப்பூசிகள் அளிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை இது பெருமளவில் கடந்து செல்லும் அபாயமும் இல்லை என்று லண்டன் மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.
குளிர்காலத்தில் மக்கள் அதிக நேரம் மூடிய அறைகளில் நேரத்தைச் செலவழிப்பதாலும், காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைத் தொற்றுகள் அதிகரிக்கும் என்பதாலும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments