
துளசி கஷாயம் ஆஸ்துமா, இருமல், சளி, முச்சுப் பிரச்னை போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணியாக இருக்கும். இதில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் , கிருமி மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன.
தேவையான பொருட்கள்
துளசி – சில இலைகள்
தண்ணீர் – 2 கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகு தூள் – ½ tsp
பனை வெல்லம் – 1 tsp
செய்முறை
துளசி இலைகள் நன்கு அலசி எடுத்துக்கொள்ளுகள். பின் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதில் சில இலைகளை அப்படியே போட்டு மீதம் உள்ள இலைகளை இடித்து சாறோடு அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் 2 கொதித்ததும் மிளகுத்தூள் , இஞ்சி ( இடித்து போட வேண்டும்) , பனை வெல்லம் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பின் அவற்றை வடிகட்டி அதில் வேண்டுமென்றால் சில துளசி இலைகளை ஃபிரெஷாக சேர்த்து பருகலாம்.
அவ்வளவுதான் துளசி கஷாயம் தயார்.
இதை சற்று குடிக்கும் பதத்திலான சூட்டில்தான் குடிக்க வேண்டும். அப்போதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும். சளி வெளியேறும். சளி , இருமலின் போது ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகலாம்.


0 Comments