Ticker

6/recent/ticker-posts

நாட்டுப்பற்று -3


இலங்கையில் வாழ்ந்த சிறுபான்மை சமூகம் இந்த நாட்டில் தேசப்பற்றோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மறைக்கப்பட்ட வரலாறு.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு ஊர்களிலும் பெரும்பான்மை சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்த தனிநபர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். தற்போதும் இருக்கின்றார்கள் என்பது உண்மை.

ஆனால் இந்து சமூகத்தின் சாபக்கேடு அரசியல்வாதிகள். தேசப்பற்றை தங்கள் சுயநலன்களுக்காக இல்லாமல் செய்தார்கள். இனத் துவேஷத்தை மூலதனமாகக் கொண்டு அரசியல் வேட்டையை ஆரம்பித்தனர் என்பது வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

சரித்திரம் மறக்காத ஒரு சரித்திர நாயகன் மர்ஹூம் அல்ஹாஜ் MIM நளீம் அவர்கள். 

அன்று சிறீமா  அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அன்னியச் செலாவணி இல்லாதபோது இந்த நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய தேசப்பற்று கொண்ட மாமனிதர் என்று இந்நாடு போற்றியது.

இதன் பின்னர்  கறுப்புப்பணத்தை நாட்டுக்குக் கொண்டு வந்தார் என்று குற்றமும் சுமத்தப்பட்டார்.

தேசப்பற்று மிக்கவர்கள் அரசியல் காரணங்களால் தேசத்துரோகிகளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறான அரசியல் துரோகங்களால் தேசபிமானிகள் ஒதுங்க வேண்டிய நிர்பந்தமான நிலை ஏற்பட்டது.

நாட்டு மக்கள் நல்லவர்கள். இந்த நாட்டில் சிறந்த புத்திஜீவிகள் வாழ்கின்றனர்.

புத்திஜீவிகள் புறந்தள்ளப்பட்டு உள்ளனர். பல்கலைக்கழகங்கள் மட்டும் சுருண்டு விட்டனர்.

எதிர்கால சமூகத்தை வழிகாட்டும் ஆய்வுகளை விட்டுவிட்டு வியாபார சந்தையில் கிராக்கி உள்ள புத்தகங்களை எழுதத் தொடங்கிவிட்டனர்.

மனிதாபிமானம் நிறைந்த மக்களுக்கு மத்தியில் அரசியல் பழிவாங்கலால் நல்லவர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டனர். நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுவிட்டனர்.

நாட்டுப்பற்று என்ற சொல் பலரது வாழ்வின் அகராதியிலிருந்து விடைபெற்று விட்டதோ என்று சிந்திக்கின்ற சூழ் நிலைகள் உருவாக்கப்பட்டன.

மூன்று தசாப்தங்களுக்குள் வந்த அரசியல்வாதிகள் சிறுபான்மை சமூகங்களை நாட்டின் எதிரிகளாக மாற்றி நாட்டுப்பற்றை இல்லாமலாக்கி அரசியல் வியாபாரத்துக்குள் அப்பாவி மக்களை சிறைப் படுத்தி விட்டனர்.

இதுகுறித்து இந்த நாட்டில் வாழுகின்ற இப்போதைய சிறுபான்மை சமுதாயமும் எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இளம் சந்ததியினரும் சரியான புரிதலோடு மிகச்சரியான சிந்தனைகளை உள்வாங்காவிட்டால் இந்த நாடு இனத்துவேசத்தால் எரிந்து போய்விடும்.

எதிர்கால சந்ததிக்கு தெளிவான விளக்கம் கொடுக்காவிட்டால் அரசியல் மக்களுக்கு அபின் என்ற சிந்தனைக்குள் இளம் சமூகம் வீழ்ந்துவிடும்.
(தொடரும்)


Post a Comment

0 Comments