நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியசாலைக்கு செல்லவும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் 16 சிறுவர்களை காவுகொண்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அவதானமாயிருக்க வேண்டும்.
ஊரடங்கு நாட்களில் தேவைக்கு மட்டுமே வெளியில் செல்லவேண்டும் .இல்லை என்றால் எதிர்வரும் நாட்கள் மிகவும் மோசமானதாயிருக்கும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
பொது மக்கள் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பொழுது அத்தியாவசிய தேவைக்கான உரிய ஆவணங்களைசோதனைச் சாவடிகளில் சமர்ப்பித்து அவற்றை நிரூபித்து பயணங்களை தடையின்றி தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதே நிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நீடித்தால் 10,000 பேரை பாதுகாக்க முடியும் எனவும் அக் குழு பரிந்துரைத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாள் மக்கள் மிகவும் துன்பத்துக்குள்ளாகின்றனர்.
இரண்டு வருடங்களை நெருங்கும் கொரோனாவை இன்று வரையிலும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு செயல் திட்டத்தை உலகில் எந்த அரசாங்கமும் மேட்கொண்டதாய் தெரியவில்லை .
ஆனால் பலநாடுகள் ஓரளவேனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகளை கட்சிதமாய் செயல் படுத்துகின்றன.
இலங்கையில் இன்றுவரையிலும் அப்படிப்பட்டதொரு செயல் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை .மக்களுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறையை அரசாங்கம் மேட்கொள்ளவில்லை.
மக்களால் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் கத்துவதை தவிர வேறு எதையும் மக்களுக்கு செய்வதில்லை.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள்தான் மக்களை சந்திக்கச் செல்ல வேண்டும்.ஒரு தலைவர் நேரடியாக சென்று மக்களுக்கு அறிவுரைகள் வழங்கும்போது அதன் பிரதிபலன்கள் நல்ல பயனுள்ளதாகவே இருக்கும்.
நாடு ஏற்கனவே பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து ,கடனுக்குமேல் கடனைப் பெற்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளும்,ஒரு சில பொது மக்களும் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைப்பதில்தான் நம் நாட்டின் எதிர்காலமே தன்கியிருக்கின்ரது.
(தொடரும்)



0 Comments