Ticker

6/recent/ticker-posts

நாட்டுப்பற்று - 1


நாம் ஒரு வீட்டில் வாழும் போது அந்த வீட்டுக்கு விசுவாசமாக வாழ்வோம்.. நிச்சயமாக அவ்வாறு வாழ்ந்தாலே அந்த வீடு சிறப்பாக அமையும்.

அதேபோன்று நாம் வாழுகின்ற நாட்டில் அந்த நாட்டுக்கு விசுவாசமாக அந்த நாட்டின் நலனில் கரிசனை கொண்டவர்களாக வாழ்வது கடமை.

ஒரு வீட்டில் ஒரு சிலர் எமக்கு விருப்பம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் நமது கடமைகளை செய்தாக வேண்டும்.

அதேபோன்று ஒரு நாட்டில் ஒருசிலர் எம்மோடு நன்றாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக நமது நாட்டின் நலனில் நாம் கரிசனை இல்லாதவர்களாக ஒரு போதும் இருக்க முடியாது.

ஒரு நாட்டில் பல்வேறு இனங்கள் வாழலாம். அனைத்து இனங்களும் சந்தோசமாக வாழ வேண்டும் அதற்காக அந்தந்த இனங்கள் தங்களால் முடியுமான பணிகளை ஆற்றியேயாக வேண்டும்.

துரதிஷ்டவசமாக நாம் நமது நாட்டோடு நல்லுறவு வைத்திருக்க பல்வேறு காரணங்கள் தடைகளாக அமைந்தன என்று சிலர் கூறுகின்றனர்.

ஒரு நாட்டின் அந்தஸ்தை, கௌரவத்தை பெற்றுத்தரும் சந்தர்ப்பங்களில், அம்சங்களில் நம்மில் பலர் கலந்து கொள்வதில்லை. 

நாம் வாழும் நாட்டுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் இந்த நாட்டின் சுக துக்கங்களிலாவது நாம் பங்கு கொண்டோமா?

இந்த நாட்டு மக்களின் நலன்களுக்காக நாம் செய்திருக்கின்ற பணிகளை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே செல்வதற்கு எம்மால் முடியுமா?

நமக்கு இழைக்கப்படுகின்ற ஒருசில அநியாயங்களை இன மத பேதமின்றி இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் தட்டிக்கேட்கும் நிலைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு சில நன்மைகளை செய்தாலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற தூய்மை, தூரநோக்கு, ஆக்கபூர்வமான பணிகள் என்ற அடிப்படையில் நாம் செய்திருக்கின்ற பணிகள் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்திக்கும் நிலையில் இருக்கின்றோம்.

நாம் வாழுகின்ற நாட்டில் எல்லா இனங்களிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள். நாட்டு நலனில் அக்கறை கொண்டு நாட்டு மக்களுக்காக பாடுபடுகின்றனர். முற்றாக இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

அத்தகைய நல்ல மனிதர்களை இந்த நாடு மெச்சுகின்றது. அவர்களது வரலாறுகள் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறன.

தேசபந்து, தேசமான்ய, தேச கீர்த்தி, தேசபிதா என்றெல்லாம் பட்டங்களை தாங்கி நிற்கின்ற சிலர் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் என்று இனங்காணப்பட்டு கொடுக்கப்பட்ட பட்டங்களா? இவர்கள் அனைவரும் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கள் என்ன?

எனவே நாடு வளம் பெற உண்மையான நாட்டுப்பற்று மிகவும் அவசியம்.
(தொடரும்)

Post a Comment

0 Comments