Ticker

6/recent/ticker-posts

கடன் கடன் ,,நாட்டில் அத்தனையும் கடன் -2

கொரோன தொற்றின் வேகம் 40சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாளாந்த தொற்றுநோய் அறிக்கையில் மேற்கண்ட புள்ளி விபரங்கள்  
அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தினுள் இலங்கையில், 35, 032 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.1,327 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் அது 34.7 % அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை  தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்லாமல் இருந்ததினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல முறை மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம்கண்டுகொள்ளாமல் இருந்ததாக இலங்கை மக்கள் தெரிவிக்கின்றனர். 

பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதாகத்தான் இருக்கின்றது.மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் மக்கள் பிரச்சினை மட்டும்தான் பேசவேண்டும்.அதுவும் இன்றைய சூழ்நிலையில் மக்களின் அன்றாட தேவைகளைப பற்றிய விடயங்கள்தான் பேசப்படவேண்டும்.

அதைவிட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டி போடுவதை நிறுத்துங்கள்.

மக்கள் கொரோன கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச் சாட்டையும் எங்கள் அரசியல்வாதிகள் முன் வைக்கின்றார்கள் .எதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் தவறுகளை மக்கள் தலை மீது போடுகின்றார்கள் 

அதற்குக் காரணம் என்ன?

உலகில் அனைத்து நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்கள் .மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் விதிக்கின்றார்கள் .அதேநேரம் மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்கின்றார்கள் ,கொரோனாவைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் தெரிவிக்கின்றார்கள் .
மக்களும் ஒத்துளைக்கின்றார்கள் .

ஆனால் இலங்கை அரசியல்வாதிகள் பாராளுமன்றமும் வீடுமாக அலைந்துகொண்டிருப்பதை மட்டும்தான் தொழிலாக செய்துகொண்டிருக்கின்றார்கள்.மக்களால் தெரிவு செய்யப் பட்டு பாராளுமன்றம் அனுப்பட்டவர்கள் இப்படி நடந்துகொள்வதால் இலங்கையில் ஒருபோதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராது என்பதை இந்த மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்,

நேரடியாக மக்களிடம் சென்று கொரோனா தொற்றின் ஆபத்துக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றக்கூடிய ஒழுங்குகளை செய்துகொடுக்க வேண்டும்.

அரசியலில் சுட்ட பணத்தை மக்களுக்காக செலவு செய்யுங்கள். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து பெயர் வாங்குவதால் எந்தப் பயனும் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை தவிர்த்து மக்களின் ஒற்றுமைக்காக பாடுபடுங்கள்.

இன்று மக்களுக்கு இனவாதம் முக்கியமில்லை .இனவாதக் கருத்துகளால் இந்த நாடு அழிந்துபோகும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் .
நாட்டு மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,

இல்லையென்றால் இலங்கையின் அழிவுக்கு இன்றைய அரசியல்வாதிகள்தான் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
(தொடரும்)

Post a Comment

0 Comments