Ticker

6/recent/ticker-posts

நாட்டுப்பற்று - 2


பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தோடு அன்பு செலுத்துவதுதான் நாட்டுப்பற்று உருவாக முதலும் முக்கியமான வழி என்று கருத்துரைக்கும் சில புத்திஜீவிகளின் கருத்து எமது கவனத்துக்குரியது. 

சிறுபான்மை சமூகம் பல்வேறு அடக்கு முறைகளுக்கு  உட்பட்டு  நசுக்கப்படுவதால் நாட்டின் மீது அன்பு கொள்ள வழிகோலாத நிலை மிகவும் கவலை தருகின்றது. 

எல்லா சிறுபான்மை  சமூகமும் பெரும்பான்மை சமூகத்தை ஆதரித்த நிலையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தை  பழி வாங்கும்  மனோபக்குவம் வளர்ந்துள்ளது என்ற கூற்றை மறுதலிக்க முடியாது.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் ஏதொருவகையில் சீரும் சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற பொறாமை நாட்டுப்பற்றை சிறுபான்மை சமூகத்திடம் வெகுவாக குறைத்துள்ளது என்ற கருத்தையும் புறக்கணிக்கணிக்க முடியாது. 

சிறுபான்மை சமூகம் நீண்ட காலம் அவதானித்து வரும் ஒரு பெரும் குறைபாடாக சொல்லும் விடயம் தேசிய விளையாட்டுக்களில் சிறுபான்மை சமூகம் ஓரம் கட்டப்படுவது என்பதாகும். இந்த நியாயம் சரியானதா ?என்பது வாதப்பிரதி வாதங்களுக்கு  உட்பட்டது. 

அண்மையில் முஸ்லிம் சமூகத்தில் சகோதரர் N.M. முகம்மத் அவர்கள் மஹரகம புற்று நோய் வைத்திய சாலைக்கு செய்த மாபெரும் பங்களிப்பு இன நல்லுறவை ஏற்படுத்தி தேசத்துக்கு செய்த பெரும் பங்களிப்பு என்பதை முஸ்லிம் சமூகம்   கொண்டாடவுமில்லை. பெரும்பான்மை சமூகத்துக்கு சென்றடையவுமில்லை . 

இது முஸ்லிம் சமூகத்தின் தவறா? அல்லது பொறாமையா? நாம் இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்பது உண்மை ஆனால் இது சரியாக உணர்த்தப்படவில்லைஎன்பதும் உண்மை . 

எம்மை விட்டுப் பிரிந்த அரசியல் வாதிகளும் எம்மோடு வாழும் அரசியல் வாதிகளும் இந்த நாட்டை நேசிக்கும் மனிதர்கள் நாம் என்பதை எதோ ஒருவகையில் காட்டத்தவறினோம் என்பது மட்டும் உண்மை. 

தமிழ் சிறுபான்மை சமூகமும் ஆயுத குழுவின் அராஜகத்தால் அழிக்க முடியாத வடுக்களை அவர்களின் சமூகத்துக்கு விட்டுச்சென்றுள்ளனர்.பாசிச பயங்கர வாதிகள் என்ற பெயர் பெற்றதனால் இவர்கள்  இந்த நாட்டை வளப்படுத்த ஒரு போதும் முனையமாட்டார்கள் என்ற கருத்து பெரும்பான்மை சமூகத்திடம் வலுப்பெற்றுள்ளது என்பதையும்  மறுக்க முடியாது.

எது எப்படியோ மூவினமும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது மட்டும் உண்மை. 
(தொடரும்)

Post a Comment

0 Comments