இலங்கை மிகவும் ஆபத்தான நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றது.காலம் தாழ்ந்த கட்டுப்பாடுகளால் எதிர்வரும் நாட்களில் மிகவும் மோசமான நிலை உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக அரச மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று இலங்கை பொருளாதார நிலையில் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட பேராபத்துக்களை சமாளிக்கும் திறனை முற்று முழுதாக இழந்துள்ளது.
அதற்குக்காரணம்....
தற்போதைய அரசாங்கம் இனவாத கருத்துக்களை முன் வைத்து ஆட்சியைப் பிடித்தார்கள்.அதிகமான வாக்குகள் பெரும்பான்மை இன மக்களிடம் இருந்தே கிடைத்தது.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது இன்றைய ஜனாதிபதியின் அட்டூழியங்களால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் சிறுபான்மையின மக்கள்.ஆகவே சிறுபான்மை வாக்குகள் சற்று குறைவாகவே கிடைத்துள்ளது.அத்தோடு ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரங்களிலும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள்தான் அதிகமாக இருந்தது.
ஆகவே இனவாததில் ஊறிப்போன அநேகமானவர்கள் வாக்களித்து இன்று அரியணையில் அமர்ந்துள்ளார் கோட்டபாய ராஜபக்ஷா.
பதவிக்கு வந்ததும் பெரும்பான்மையின மக்களுளை குஷிப்படுத்த பலதரப்பட்ட வாக்குறிதிகளை அள்ளி வீசினார்.மக்களின் பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்தி மக்களை நம்ப வைத்தார்.முழுக் குடும்பத்தையும் அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டார்.அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு நாட்டை சின்னாபி(ன்)னமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களும் கவலைப்படுகின்றார்கள்.
இந்த குடும்ப ஆட்சியை எதிர்த்து தினமும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் ,அரசு கண்டு கொள்வதாய் தெரியவில்லை.
அதற்குப் பதில் எதிர்க் கட்சிகளை பழிவாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்..
இன்று நாடு மிகவும் ஆபத்தான நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது. சோமாலியைவிட மோசமாக பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.ஒரு நிலையற்ற பொருளாதாரக் கொள்கை இல்லாமல் நாடு எங்கோ ஒரு சகதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த அரசாங்கத்திட்கு சீனாவை விட்டால் வேறு வழியில்லை.அவர்களிடமே மீண்டும் மீண்டும் கை நீட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.நாட்டை கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களிடம் அடகு வைத்துவிட்டார்கள் .அதனால் கை கட்டி நிற்கத்தான் வேண்டும்.
பங்களாதேஷிடம் சென்று கைநீட்டியுள்ளார்கள்.பாகிஸ்தானிடம் சென்று முட்டி போட்டுள்ளார்கள் இந்தியாவிடம் மண்டியிடுகின்றார்கள்
கடன் கடன் ,,நாட்டில் அத்தனையும் கடன் என்ற நிலைக்கு நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
முன்பெல்லாம் அரபு நாடுகள்தான் இவர்களுக்கு எல்லாமே.கடன் கொடுப்பதிலிருந்து நாட்டின் அபிவிருத்திகள்வரை அத்தனையிலும் அரபு நாடுகளின் பங்களிப்பு மிகவும் உன்னதமாய் இருந்தது.
இலங்கையின் இனவாதப் போக்கால் அரபு நாடுகள் உதவிகளை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக்கொண்டார்கள்.அரபு நாடுகளின் கடன் உதவி வட்டியில்லாத கடன்.
இந்த வட்டியில்லாத கடன் வறுமை நாடுகலுக்கு மிக மிக பயனுள்ளதாய் இருக்கின்றது.அந்த பாக்கியத்தையும் இலங்கை இழந்து கொண்டிருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில்தான் இலங்கையை சேர்ந்தவர்கள் அதிகமாக தொழில் புரிகின்றார்கள்.பல ஆண்டுகளாக இலங்கைக்கு அதிகமாக தொழில் வாய்ப்புக்களை அரபு நாடுகள்தான் கொடுத்தன.அதிகமான வருமானமும் அரபு நாடுகளிடமிருந்துதான் கிடைத்ததன .
இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவியும் அரபு நாடுகள் செய்தன.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டு வருகின்றது.
இலங்கைக்கான உதவிகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வருகின்றார்கள் .இலங்கையை ஒரு இனவாத நாடாகத்தான் அரபு நாடுகள் கணித்துள்ளன .
இனவாதம் ஒருபோதும் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லாது.அது நாட்டை மிகவும் பயங்கரமான ஒரு பாதாளத்தில் கொண்டுபோய் தள்ளி விடும் என்பதற்க்கு மியன்மார் ஒரு உதாரணம் .அதற்குப் பின் இலங்கையை உதாரணம் காட்டலாம்
அரபு நாடுகளின் அநேகமான நிதி உதவிகள் நிறுத்தப் பட்டுவிட்டன.தொழில் வாய்ப்புக்களை குறைத்துக்கொண்டு வருகின்றார்கள் .
இலங்கைக்குப் பதில் வெவ்வேறு நாடுகளிடமிருந்து தொழிலாளர்களை எடுக்கின்றார்கள் .இந்தோனேசியா ,பிலிப்பின்,எதியோப்பியா போன்ற நாடுகள் அதிகம் பயன் பெறுகின்றன.இது இலங்கைக்கு மிகப் பெரும் இழப்பாக கருதப்படவேண்டும்.
இன்று இலங்கையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை .தொழில் வாய்ப்புக்களை பெற முடியாத நிலை .மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உன்ன உணவில்லாமல் பட்டினியில் வாடும் மக்களுக்கு தீர்வு இல்லாமல் தடுமாறும் நிலை ,இவை அத்தனைக்கு தற்போதைய அரசாங்கம்தான் பொறுப்புக் கூற வேண்டும்.
இன்று கொரோனா தொற்று வேகமாய் பரவிக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் அசமந்தப்ப்போக்காள் இலங்கை மக்கள் இன்று கஷ்டப் படுகின்றார்கள்,
மருத்துவர்களின் ஆலோசனைகளை மதிக்காமல் அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படி செயல்பட்டதால் வந்த வினையை இன்று நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள்
எதிவரும் நாட்கள் இலங்கையில் மிகவும் பயங்கரமானதாய் இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்
தற்போதைய அரசாங்கம் இந்த சூழ் நிலையை எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் ?
இலங்கையை மீட்டெடுப்பார்களா ?அல்லது படுகுழியில் தள்ளி விடுவார்களா?
போன்ற விபரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்
(தொடரும்)



0 Comments