
பொதுப்பணிகளில் இன மத பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் இந் நாட்டு மக்களுக்கு உதவி ஒத்தாசைகள் புரிய வேண்டும். இது தேசப்பற்றை பறை சாற்றும் ஒன்றாக அமையும்.
எமது நிறுவனங்கள் சில எல்லா மக்களுக்கும் உதவிகள் செய்வதை பார்க்கின்றோம். உதாரணமாக முஸ்லிம் எய்ட் (MUSLIM AID) போன்ற இன்னும் சில நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இந்த செயல் மிகவும் வரவேற்கத்தக்கது.
இதே போன்று எங்களின் நிறுவனமான COMPANIONS OF HUMANITY யும் அனைத்து இனங்களையும் கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகிறது.
இன்று சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் இன மத வேறுபாடுகள் காட்டாமல் செய்துவரும் பணிகளை நாம் வரவேற்க வேண்டும், இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
கல்வி, சுகாதாரம் போன்ற பொது விடயங்களில் எல்லாம் பொதுவாகவே நாம் பணிக்களாற்ற வேண்டும்.
சவூதி அரேபிய அரசாங்கம் ஏராளமான உதவிகள் இந்நாட்டுக்கு செய்யப்பட்டுள்ளன. இது ஊடகங்களில் பேசப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு சென்றடையாத காரணத்தால் சிறு பான்மை சமூகம் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்றும் நாட்டு நலனில் அக்கறை கொள்ளாதவர்கள் என்றெல்லாம் ஆங்காங்கே தப்பபிப்பிராயங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நாட்டு முஸ்லிம்கள் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் ஏராளம் உள்ளன. அவை புத்தகங்களில் மட்டும் புதைந்துள்ளன.
தேசத்துக்கு ஆற்றிய அனைத்து பங்களிப்புகளையும் எமது நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மொழியில் கொடுக்கப்பட வேண்டும்.
இந்நாட்டில் பற்றுக் கொண்டவர்கள் என்றால் நாம் அனைவரும் சிங்கள மொழியை கட்டாய பாடமாக கற்றுத்தேறியிருக்க வேண்டும்.
(முற்றும்)


0 Comments