Ticker

6/recent/ticker-posts

வேட்டை”யின் பணி, மென்மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்-ஐ.ஏ.ஸத்தார்

தனது  ஆறாவது வெற்றி வருடத்தில் கால்பதிக்கும் “வேட்டை” மின்னிதழுக்கு முதற்கண்  எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
உலகிலுள்ள தமிழ்மொழியில் எழுதும் தகுதி படைத்த நல்ல பல எழுத்தாளர்களைக்  கண்டுபிடித்து எழுதவைப்பதிலும், ஆற்றலிருந்தும் எழுதும் ஆர்வமில்லாதிருந்த பலரைப்  பலாத்காரமாக எழுதச் செய்வதிலும்,  அவர்களது ஆக்கங்களைக்   கச்சிதமாக வடிவமைத்து மின்னிதழில் பதிவிடுவதிலும் one and only என்ற நிலைப்பாட்டில்
தன்னை ஈடுபடுத்திக்  கொண்டிருக்கும், கல்ஹின்னை மண்ஈன்ற  freelance ஊடகவியலாளர் முஹம்மது நயீம் அவர்களது பணி மகத்தானது என்றுதான் கூற வேண்டும்.
 
இலங்கையில் தமிழ்மொழியை வளர்த்த பெருமை தமிழகத்தையடுத்து  கல்ஹின்னைக் கிராமத்துக்கு உண்டு! கவிஞர் ஸுபைர், மாமா ஹனிfபா, கவிமணி  ஹலீம்டீன், எஸ்செம்  ஹனிfபா போன்றோருக்கு அடுத்தபடியாக இப்பணியை  முன்கொண்டு செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்  முஹம்மது நயீமின் “வேட்டை”ப் பயணம்  கண்டு  கல்ஹின்னை மண்வாசிகள் பெருமையாகக் கொள்ளாதிருக்க முடியாது!
 
அவ்வப்போது சமகாலச் செய்திகளை வாசகர்களுக்கு அள்ளி வழங்குவதில் உலக  மின்னிதழ் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள “வேட்டை”, கருத்தாழமிக்க - விஞ்ஞானம், தொழில் நுட்பம், உடல்நலம், வரலாறு, சமயம், பயணம்   சார்ந்த நல்லபல கட்டுரைகளையும், மனித மனங்களை சீர்செய்யும் கவிதைகளையும், யதார்த்தமான சிறுகதைகள் -  பிற மொழிக்கதைகள் - வரலாறு, சமூக சீர்திருத்தம், காதலுணர்வு கொண்ட  தொடர்கதைகளையும் வாரந்தோறும் பதிவிட்டு வந்த “வேட்டை”, தற்போது நாள்தோறும் ஆக்கங்களைப் பதிவிட்டு வருவதானது  அதன் முன்னெழுச்சியின்  பங்களிப்பு என்றே கூற வேண்டும்!

ஐந்தே வருடங்களில் ஐம்பது வருடங்களின்  முதிர்வை அடைந்துவிட்ட,  “வேட்டை”யின் பணி, மென்மேலும் சிறப்பாகத் தொடரவேண்டுமென்று  இன்னொருமுறை வாழ்த்துகின்றேன்!


அன்புடன்,
ஐ.ஏ.ஸத்தார்

Post a Comment

0 Comments