
" வேட்டை" சஞ்சிகைக்கு அகவை ஆறு. இது 2016 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஆரம்பித்த முதல் சில மாதங்களாக தினசரி முகநூல் மின்னிதழ் சஞ்சிகையாகவே வெளி வந்தது . அதன் பின் வாரம் இரு முறையாகி தற்போது இணையத்தள மின்னிதழாக உலகம் முழுதும் வெற்றி கரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது .
சர்வதேச ரீதியில் தமிழ் மொழி பேசும் வாசகர்கள் பொழுது போக்கவும், வாசிப்பை இணைய வழியூடாக ஊக்குவிக்கவும் பல மின்னிதழ் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளி வந்தாலும் "மலையகத்தின் தமிழகம்" என சான்றோர்கள் போற்றிய கல்ஹின்னை மண்ணில் உருவான "வேட்டை" சஞ்சிகைக்கென தனிச் சிறப்புகள் பல உண்டு .
கல்ஹின்னை என்ற ஒரு கிராமத்தை உலகறியச் செய்த மூத்த எழுத்தாளர்களின் இலக்கியப் பயணம் அவர்களோடு நின்று விடாது தொடர வேண்டும் என்ற தீராத வேட்கை அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளரான எஸ்.எச்.எம்.நயிம் அவர்களின் கனவை மெய்ப்பித்த இலக்கிய "வேட்டை" யாக உருவானது.
நூற்றுக்கும் அதிகமான உலக நாடுகளில் வாழும் தமிழ் பேசும் வாசகர்களைக் கவர்ந்த "வேட்டை " சஞ்சிகையில் உலகப் புகழ் பெற்ற சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளி வருகிறது. அதே நேரம் புதிய எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து உற்சாகமூட்டப் படுகிறது. எழுத்தாற்றல் உள்ள பல இலை மறை காய்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களையும் ஊக்குவிக்கிறது "வேட்டை".
மத நிந்தனைகள், மனிதகுல ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்கள், தீவிரவாதக் கருத்துக்கள் போன்றவற்றை முற்றாக எதிர்க்கிறது வேட்டை.
சினிமாவையும் ஆபாசங்களையும் முற்றாகத் தவிர்த்து இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் , துணுக்குகள், தகவல்கள் ,உள் நாட்டு வெளி நாட்டு செய்திகள் எனப் பயன் தரும் விடயங்களை மட்டுமே வாசகர்களுக்கு வழங்குகிறது வேட்டை.
பயனுள்ள கருத்துக்களை அழகான சிந்தனையுடன் எழுதும் நல்ல ஆக்கங்களை வரவேற்கிறோம். என்றும் போல் வாசகர்களின் முழுமையான ஆதரவையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது "வேட்டை".
இதுவரை எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் மற்றும் தொடர்ந்தும் ஆதரவைத் தரும் வாசக அன்பர்களுக்கும் "வேட்டை" நிர்வாகத்தின் நன்றியுடன் நிறை நேசங்கள்.
வேட்டை நிர்வாகம்-


2 Comments
இனிய வாழ்த்துகள்... நிறைய படைப்பாளர்களை ஊக்கப்படுத்தி பெருமை நமது வேட்டை இதழுக்கு உண்டும்.
ReplyDeleteநன்றி தொடர்ந்தும் எழுதுங்கள்
ReplyDelete