Ticker

6/recent/ticker-posts

வேட்டை மின் சஞ்சிகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!.அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ்


எதிர்வரும் 27.08.2021ம் நாள் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் 
காத்திரமான ஆக்கங்களின் சூத்திரதாரியான வேட்டை மின் சஞ்சிகைக்கு வாழ்த்துக் கூற எனக்கும் வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு மிகுந்த  மகிழ்ச்சியடைகிறேன்.

அரசியல்,ஆரோக்கியம் ,இலக்கியம் ,பொருளியல் ,இஸ்லாமியச்சிந்தனைகள்,உள்நாட்டு ,உலக நடப்புகள்,என சகல துறைகளையும் அடக்கிய சமகாலத்துக்கேற்ற கட்டுரைகள்,கவிதைகள்,சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பட்ட ஆக்கங்களை வழங்கும்  நோக்கத்தை வேட்டை முழுமையாக  நிறைவேற்றி வருவது நீண்ட நாள் நிதர்சனம் .

துறைபோன எழுத்தாளர்களை நிறைவாக கொண்டிருப்பது வேட்டைக்கு கிடைத்த  வெகுமதி என்றே கூறவேண்டும்.

வாசகர்களின் உள்ளங்களில் தாக்கங்கள் செலுத்தக் கூடிய ஆக்கங்கள் இல்லாமல் வேட்டை  வெறுமைப்பட்ட வரலாறு கிடையாது.கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்ததை ஈண்டு நோக்கினால் சான்றுப் படுத்தப் போதுமான விடயங்கள் உள்ளன. 

வேட்டை,  காலத்தின்  கண்ணாடியாய் இருப்பது மாத்திரமே போதும். பூரணமான சஞ்சிகை என்பதற்கு  காரணங்கள்  வேறு தேவையில்லை.

வாசிக்கத் தூண்டும் தலைப்புக்கள்,யோசிக்கத் தூண்டும் தொழில் நுட்பத் தகவல்கள் ,உறுப்பமைந்த எழுத்துக்கள் ,உள்ளம் கவரும் வண்ணங்கள் வேட்டையின் வஷேட தன்மைகள் ஆகும்.

சகல துறைகளையும் உள்ளடக்கி சஞ்சிகை வெளியிடுதல் என்பது
சாதாரணமான சமாச்சாரமல்ல.பல் வேறுபட்ட சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதை சிந்திப்பவர்கள் புரிந்து  கொள்வார்கள் .
இடையிடையே எதிர்ப்படும் தடைக்கற்களை எல்லாம் கடந்து தான் ஆறாவது ஆண்டைத் தரிசிக்கப் போகிறது வேட்டை .
ஆம் தொய்வேதும் இல்லாமல் தொடர்ச்சியாக  வலம் வந்தமை வேட்டைக்கு  கிடைத்த வியத்தகு வெற்றி .

வேட்டையாடும்  பாரிய பணிக்காய் பூட்டை உடைத்து புதுப்புது செய்திகளைத் தரும் ஆசிரிய குழாத்துக்குஅகம் நிறைந்த  நன்றிகள்.
வேட்டை ,கோட்டை விடாமல் குறிதவறா பயணிப்பதற்கு என் பாராட்டுகள்!

கோட்டை கோபுரங்கள் தொட்டு  ஓட்டை உடைசல்கள் வரை ஊடுருவி செய்திகளை வேட்டையாடும் இச் சஞ்சிகை விருட்சம் காட்டை மேட்டை நாட்டைக் கடந்து நாலா திசைகளிலும்
வேரோடவேண்டுமென்று விநயமாக வாழ்த்துகிறேன்.

வாசகர் உள்ளங்களை வேட்டையாடும் பணியை வேட்டை  தொடரும் என்று பெரிதும் நம்புவதோடுவேட்டை விருட்சம் மேலும் மேலும் விழுது விட்டு வளர்ந்து சாதனை ஏட்டில் இடம் பிடிக்க சகலவல்லமை கொண்ட இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

நன்றி .
வேட்டையில் விருப்போடு,
அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
இலக்கிய வித்தகர்
கலாபூஷணம்
பெருங்கவி

Post a Comment

0 Comments