Ticker

6/recent/ticker-posts

பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ர்ஃப் அவர்களின் 21வது நினைவேந்தல்

இழப்பு என்ற இலக்கணத்துக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்ந்த எம் சமூகத்திற்கு இழப்பு என்பதை உணர்த்துவதற்காக தன் உயிரைத் தியாகம் செய்த பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களை நினைவு கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன்

பல அரசியல் தலைவர்கள் தோன்றியும் மறைந்தும் இருந்தாலும் எமக்கு என்றைக்கும் மறக்க முடியாத  தலைவராக  பிறந்தாரோ என்று நினைக்க பெரும் தலைவர் அஷ்ரப் மட்டும் போதும். அந்த பெருந் தலைவரின் சிந்தனையில் உருவாக்கப் பட்ட அரசியல் சாம்ராஜ்ஜியத்தை
அவரோடு பயணித்தவர்கள் பாதுகாக்க நினைத்தாலும் அடிவருடிகளாகவும் சுய லாபத்திற்கு விலை போகின்றவர்களாகவும் செயல்பட்டு  எங்கள் பெருந் தலைவரின் சிந்தனைகளை சீற்குளைக்கின்றார்கள்.

சமூகம் இத்தனையையும் இழந்து நிற்கும் சூழ்நிலை வந்தபோதும் ஒன்று படாமல் நிற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
பெருந்தலைவரின் பெயர் சொல்லி அரசியல் செய்பவர்களில்  அவர் வழிதான் நடப்போம் என்று சத்தியம் செய்தவர்கள். ஒன்று படாமல்  இருப்பது சமூகத்தை வியக்க வைத்துள்ளது

தான் ஒன்று படாவிட்டாலும் பெருந் தலைவரின்  சிந்தனையில் வழி நடக்கும் சிலரையாவது சமூகத்துக்காக  செயல்பட விடாமல்
இருப்பவர்களை பெருந் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை என்று சொல்லுவதற்கு வெட்கமில்லையா?

ஒரு தலைமைக்கு கட்டுப்படுவதும்   ஒரு   சமூகத்தை ஒரு நிலைப் படுத்துவது ஒரு சமூகத்தின் தேவைக்கு நாம் எவ்வாறு செயல் பட வேண்டும் என்றெல்லாம் கற்பித்த அந்த பெரும் தலைவர் உருவாக்கிய சிந்தனைகளை கலைக்க வேண்டாம்.

ஒன்று பட்டு பயணிக்க முடியாதவர்கள் எங்கு வேண்டும் என்றாலும் சென்று அரசியல் செய்து கொள் என்று சமூகம் உங்களை விடுகின்றது.

பெருந்தலைவர் அவர்களின் நினைவு நாள் அன்று என்னுடைய 12 வயது முதல் பெருந்தலைவர் MHM அஷ்ரப் அவர்களை   நெஞ்சிலும் நினைவிலும் சுமந்தவனாகவும்
இன்று உங்கள் சிந்தனைகளை என் மனதில் சுமந்து கவலையோடு இந்த வரிகளை சமர்ப்பணம செய்கின்றேன்.
நன்றி
தொகுப்பு
GGI JABEEN Mohamed

RinTv இது நமக்கான அடையாளம்

Post a Comment

0 Comments