Ticker

6/recent/ticker-posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் Zoom கலந்துரையாடலில் நடந்தது என்ன?

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில். 2021/07/07 இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட்ட வேண்டும் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Zoom தொழிநுட்ப கலந்துரையாடலில் நடந்தது என்ன

இந்த கலந்துரையாடல்முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது கருத்துக்களை தெரிவிக்கவும்

 முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள
 கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களால் எடுக்கப் பட்டுல்ல
 முன்னெடுப்புக்கள் என்ன என்று அறிந்து கொள்ளவும் நடைபெற்ற கலந்துரையாடல் இலங்கையிலுள்ள 24  முஸ்லிம் அமைப்புக்களை பிரதிநிதி படுத்தும் வகையில் 50 உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்

சமூகம் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடலில்

சமூக விரோதிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்ற விடயத்தை
13/09/2021 இரவு ஹிரு தொலைக் காட்சியில் நடந்த நேரலையின் போது ஞானசார தேரரின் கலந்துரையாடலின்போது தேரரின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.

சமூக நிலவரம் குறித்து பேசப்பட்ட  விடயத்தை வெளியாகிய
சமூகத் துரோகி ஒருவரும் அந்த கலந்துரையாடலில்  இருந்திருக்க வேண்டும். 
அல்லது அரசதரப்பு புலனாய்வு பிரிவு அல்லது தொலை பேசி நிறுவனங்கள் இந்த விடயத்தை பதிவு செய்திருக்க வேண்டும்

அவ்வாறு அரச அனுசரணையுடன் பதிவு செய்யப் பட்டிருந்தால்
குறிப்பிட்ட தேரருக்கு அந்தப் பதிவுகள் சென்றடைய வாய்ப்புகள் இல்லை என்ற விடயத்தையும் நாம் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட சமூகத் துரோகிகள் யார் என்ற விடயத்தை  எமது  சமூகம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாமிய வழிகாட்டலில்  சமூக  ஒற்றுமையுடன் ஒன்று படும் வரையில் எமது சமூகத்திற்கு விடிவு இல்லை என்ற விடயத்தை இந்த சம்பவத்தினூடாக நன்கு உணர முடிகின்றது.

அனைவரையும் அந்த இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.
தேரரின் அந்த நேர்காணலில் எதிர்வரும் காலங்களில் ஏற்கனவே நடந்தது போன்று ஒரு குண்டு வெடிப்பு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் குறிப்பிட்ட விடயங்களை நன்கு அவதானிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற விடயத்தை உணர வேண்டும்.

காரணம் முன் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது 

ஏற்கனவே அவர் இஸ்லாமிய விரோத  கருத்துக்களை  தெரிவித்த போதும்
எமது சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டக் கூடியதாக மாத்திரமே அந்த கருத்துக்களை அவதானித்து இருந்தோம்.

மாறாக அவர் சொல்கின்ற விடயங்களில் இருந்து குறிப்புகளை எடுத்து எமது பார்வையை சமூகத்தின் பக்கம் நாம் திருப்பவில்லை.

எமது சமூகத்தில் தீவிரவாத சிந்தனை இல்லாவிட்டாலும்
அந்த தேரர் நேர்காணலில் தெரிவிக்கப் பட்ட விடயங்களில்  எமது சமூகமும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

எமது மார்க்கத்திலும் எமது சமூகத்திலும் தீவிரவாத சிந்தனை இல்லை
என்று நாம் உறுதியாக இருக்கும் நிலைப்பாட்டினால்
எமது சமூகமும் எமது தலைமைகளும் இந்த விடயத்தில் கவனக்குறைவாக இருந்து இருக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் அவ்வாறு செயல்படாமல் மிக அவசரமாக ஊர் பள்ளிவாசல் மற்றும் ஏனைய அமைப்புகள் நிர்வாகங்கள் ஒன்று பட்டு மிகவும் அவசரமாகஎங்களது ஊர்களில் உள்ள வாலிபர்களின் செயல் பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

மார்க்க கற்றலில் தீவிரவாத சிந்தனையை இல்லாவிட்டாலும்வாலிபர்களின் தொடர்புகள் பற்றிய தெளிவு பெற்றோர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக உலகளாவிய ரீதியில் 
எவருக்கும் எவருடனும் தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆகவே தனிமையாகவும் இரகசியமாகவும் இயங்கக்கூடிய செயல்படக்கூடிய வாலிப சமூகத்தை கண்டிப்பாக ஊர் பொறுப்புதாரிகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

இந்த விடயத்திற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம். 
அனைவரையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால்
எமது சமூகத்தின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இலங்கையில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய விரோத செயல்பாடு
இலங்கை ஆட்சியாளர்களின் தேவைக்கு அல்ல.

இஸ்லாமோஃ போபியா என்று அழைக்கப்படும்
சர்வதேச இஸ்லாமிய விரோத செயல்பாட்டின் ஒரு அம்சமாகும் என்ற விடயத்தை நாம் உணர்ந்து செயல்படுவோம்
 நன்றி வஸ்ஸலாம்

    15/09/2021    
 தொகுப்பு 
GGI JABEEN Mohamed


Post a Comment

0 Comments