Ticker

6/recent/ticker-posts

" கருணை "


மாட்டுச் சாணம் தெளித்த
முற்றத்தில்
உலரும் நெல்மணிகளை
காகங்களிடமிருந்து காப்பாற்ற
என்னிடம்
நீளமான குச்சி தந்து
துரத்த சொன்ன 
அதே அம்மாதான்
காலையில் 
சோற்றுப்பருக்கைகள்
நிரம்பிய பாத்திரத்தை
ஒரு கையில் ஏந்தியபடியே
"கா...கா..." என்று
கரைகிறாள்...

Post a Comment

0 Comments