கலேவெலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கலேவெல அல் புர்கான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.தற்போது முன்பள்ளி ஆசிரியையாக கடமையாற்றும் இவர் கற்கும் காலத்திலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தினகரன் 'சிறுவர் உலகம்" பகுதியிலேயே இவர் முதலாவது எழுதத் துவங்கினார்.தினகரன் சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
பாடசாலைக் காலத்தில் பொது அறிவு போட்டி கட்டுரை என ஆர்வம்காட்டி சான்றிதழ்கள் பெற்றுள்ளதோடு விளையாட்டிலும் தன் திறமையை காட்டி அகில இலங்கை ரீதியில் சான்றிதழ்களை பெற்றவர்.
வானொலியில் 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி,வாலிப வட்டம் இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சிகளில்தனது ஆர்வத்தை வெளிக் கொணர்ந்தவர். அதுமட்டுமன்றி நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் இவரது ஆக்கங்கள் ஒளிபரப்பாகி உள்ளதோடு அவரது பிரதியாக்கங்களும் ஒளிபரப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதேச நூலகத்தில் இணைந்து கவிதை கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து பிரதேச மாவட்ட மாகாண மட்டத்தில் பரிசில்களை பெற்றுள்ளார்.
இவரது கலையார்வம் வளர வாழ்த்துக்கள்.
தகவல்;சம்மாந்துறை மஷூரா.



0 Comments