ஜாஃப்னா கிங்ஸ் லங்கா பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது.

ஜாஃப்னா கிங்ஸ் லங்கா பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது.

லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். காட்மோர் 57 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் குர்பாஸ் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்

இதையடுத்து, 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே கிளாடியேட்டர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் 39 ரன் எடுத்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில், காலே கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஜாஃப்னா அணி சார்பில் வஹிந்து ஹசரங்கா, சதுரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post