வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசெஜ் அனுப்பும் பயனர்களுக்காக புதிய வசதியை கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.
உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப்.
அவ்வப்போது பயனர்களின் தேவைக்கு ஏற்ப பற்பல அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுப்பது வாடிக்கை. அவ்வகையில் வாட்ஸ் அப்பில் ஒலி அமைப்பில் செய்தி அனுப்பும் வாய்ஸ் மெசேஜிங்கில் புதிய அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளது.
அதன்படி வாய்ஸ் மெசெஜுக்காக பதிவு செய்யப்பட்டதை சரிப்பார்க்கும் preview வசதியை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். இதன் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்படுவதை தவிர்க்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த புதிய வசதி iOS, Android, Whats app web என அனைத்து தளங்களிலும் இயங்கும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக வாய்ஸ் மெசெஜ் சாட்களை 1.5x அல்லது 2x வேகத்திலும் கேட்கும் வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
They’re not mistakes, they’re rehearsals. Now you can preview your voice messages before you hit send. pic.twitter.com/ohnEVrGTvD
— WhatsApp (@WhatsApp) December 14, 2021
0 Comments