வாழ்த்துங்கள்! வாழ்ந்திடலாம்!

வாழ்த்துங்கள்! வாழ்ந்திடலாம்!


வாழ்த்துங்கள் நாமும் வாழ்ந்திடலாம்! 
வாழ்த்துங்கள் நாமும் வாழ்ந்திடலாம்!

மற்றவர் ஆற்றலை வாழ்த்துங்கள்!
மாற்றார் எனினும் வாழ்த்துங்கள்!

வயதில் சிறியோர் என்றாலும்
ஆற்றலைப் பார்த்து வாழ்த்துங்கள்!

வயதில் முதியோர் என்றாலும்
உள்ளம் குளிர வாழ்த்துங்கள்!

ஆணா பெண்ணா பார்க்காமல்
பண்பைப் பார்த்து வாழ்த்துங்கள்!

ஒழுக்கம் கொண்ட சான்றோரை
ஆசிகள் நாடி வாழ்த்துங்கள்!

கூடா ஒழுக்கம் கொண்டோரை
திருந்தி வாழ  வாழ்த்துங்கள்!

அம்மா அப்பா தெய்வங்கள்
உணர்ந்து வணங்கி வாழ்த்துங்கள்!

மனைவி குழந்தை குடும்பத்தை
கடமை செய்தே வாழ்த்துங்கள்!

உற்றார் உறவை வாழ்த்துங்கள்!
உண்மை நட்பை வாழ்த்துங்கள்!

வாழ்த்துங்கள் நாமும் வாழ்ந்திடலாம்! 
வாழ்த்துங்கள் நாமும் வாழ்ந்திடலாம்!




Post a Comment

Previous Post Next Post