Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரட்டை சகாப்தம்!


தினம் எழுகையில் 
இரட்டைக்கிளி ரீங்காரம்
அம்மாவின் பழக்கூடையில் 
இரட்டை வாழைப்பழங்கள்
அடிக்கடி வருகை
அம்மாச்சியின் புகைப்படத்தில்
இரட்டைத்துளை வண்டின் கூடு
கொள்ளையில் காய்த்து 
குழுங்கிய நெல்லிக்கனிகளி்ல்
எத்தனையோ இரட்டைகனிகள்
தெருமுனை குப்பைத்தொட்டியில் 
இரட்டை விதை மாங்கன்று
இதெலாம் மனநிலையில்
வேரூன்றிவிட
பெயரை யோசித்து
உடைகளை நேசித்து
இரட்டை பெயர்களை 
விதவிதமாக வாசித்து
தேவதைகளா, இராசகுமாரர்களா
ஒரே முத்தத்தில் இரண்டு 
முத்துகளா என இன்புறும் 
ஆண்மகனின் இல்லம் வருகையில்
நீராடி குழல்நீரை வடியவைத்து
அதற்கு முன்னே 
விழிநீரை நிறையவைத்து
தலை துவட்டிக்கொண்டு 
நிற்கும் மனைவியின்
மாதக் குருதியில்
எங்கே நான் கண்டு 
கொஞ்சி தீர்க்க
எனது இரட்டை தேவதைகளையும்,
கம்பீர இராசகுமாரர்களை.....






 

வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments