கார்காலத்தின் உச்சம்
செம்மண் நிறத்தோடு
புதுப்புனல் பாய்ந்து வர
மனமோ கெண்டையானது.
மணநாள் நினைத்து
கன்னம் சிவக்கத் தலைகவிழும்
நங்கைபோல் நதிக்கரை
நாணல்களின் அணிவகுப்பு.
மாலைநேரத்து தென்றலிடம்
மௌன மொழி பேசும் தென்னைகள்
ஒற்றுமையின் சின்னமாய்
அந்திவானத்துப் பறவைகள்
நதியுடன் கைகோர்த்து
இயற்கை எழில் கூட்ட
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் பரிசல்பெண்
இவையாவும் புகைபடிந்த
ஓவியமாய் நெஞ்சில்
ஆம்..நாற்பதாண்டின் வாழ்வியலை
புரட்டிப்போட்டது காலச்சக்கரம்
கொள்ளைபோன மணலோடு
மாண்டுபோனது
எனது கிராமத்து தோற்றம்
அலைவருடிய
கூழாங்கற்களுக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது.....
அந்த நதியின் பயணம் !
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
4 Comments
மிக்க நன்றியுடன்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனமோ கெண்டையானது...
ReplyDeleteகொள்ளைபோன மணலோடு மாண்டேபோனது எம் கிராமம்...
சிறப்பு கவிச்சுடர் அவர்களே
அருமையான கவிதை, மிக்க நன்றி ஐயா
ReplyDelete