சூரியக் காற்றை
சுவாசிப்பதால் தான்
பூமி
புதுப்பிக்கப் படுகிறது
வினாடிகள் வீழ்வதும்
புது வினாடி
விதைக்கப் படுவதும்
நிமிடங்கள்
நிர்மூலமாவதும்
அடுத்த நிமிடம்
அவதாரம் எடுப்பதும்
மணித் துளிகள்
பனித்துளியாவதும்
புதிய மணி
பதியனிடப் படுவதும்
நாட்கள்
சங்கீதக் கதிரை விளையாடுவதும்
வென்ற நாள் போய்
வேறொரு நாள் வருவதும்
மாதங்கள் மார்கழி வரை
மரணிப்பதும்
மறு மாதம் தை முதல் ஜனனிப்பதும்
வருடங்கள்
வாசற்படி தாண்டுவதும்
புது வருடம்
புட்டுவத்தில் அமர்வதும்
தசாப்தங்கள்
தடம் புரளுவதும்
வேறொரு தசாப்தம்
விடிவதும்
சகாப்தங்கள்
சாவைத் தரிசிப்பதும்
அடுத்தடுத்து சகாப்தங்கள்
அவதாரம் எடுப்பதும்
சூரியக் காற்றைப் பூமி
சுவாசிக்கும் வரையில்தான்
ஆம்
சூரியனை இறைவன்
சூனியமாக்கினால்
இமைப் பொழுதில் எல்லாம்
ஸ்தம்பித்தே போய் விடும்
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments