உன்னை ஜெய்க்க யாருமில்லை...
உன்னை வீழ்த்தவும் எவருமில்லை...
மனமே ஆசைப்படு...
கைபிடியளவு இதயம்...அதில்
கையைமீறிய ஆசைகள் பல...
ஆனாலும் கைகூடும் ஆசைகளோ சில...
என்றாலும் மனமே ஆசைப்படு...
ஆசை என்பது இல்லையென்றால்...
உலகம் அழகாய் தோன்றாது...
உலகை ரசிக்க மனமே ஆசைப்படு...
கனவுகள் காணலாம்..தினம் தினம்...
ஆனாலும் எல்லா கனவுகளும்
நிறை வேற போவதில்லை...
என்றாலும் கனவு காண்பதை
நிறுத்தி விடாதே...
மனமே கனவு காண ஆசைப்படு...
நீ காண்பவை பொய்யாகலாம்...
ஏன் நீ நினைப்பவை
கைவிட்டும் போகலாம்...
நீ கனவிலும் நினைக்காதவை
நிறைவேறவும் செய்யலாம்...
மனமே ஆசைப்படு...
மனிதன் ஆசைபடாவிட்டால்...
இவ்வுலகம் தோன்றிய
காலம் தொட்டே..
உறைந்து போயிருக்கும்...
மனித ஆசைகளே
உலகை அழகாக்கியது...
உலகை இயங்கச்செய்கிறது...
ஆசைகளே...
எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது...
மனமே போதுமென்ற அளவு ஆசைப்படு...
கற்பனையில் வாழ்ந்து விடு...
நேரம் வரும் போது உன்
ஆசைகளை பூர்த்தி செய்...
அதுவரை மனமே ஆசைப்படு...
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments