கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-11

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-11


ஆரணிய காண்டம்
ராமன்--சீதை--இலக்குவன்தென்திசைசெல்தல்

அங்கிருந்தால்மக்கள்வருவார்கள்என்றேதான்
தென்திசைசென்றார்நகர்ந்து.

மாரீசன்வதைப்படலம்
மாரீசன்இராவணனுக்குஅறிவுரை
மண்ணாசை பெண்ணாசை நாட்டின் கொடுங்கோன்மை
இம்மூன்றும் என்றுமே தப்பு.

இராவணனின்சீற்றம்
மாரீசா! சொன்னதைச் செய்க! அறிவுரை
கூறாதே !ஆணை இது.

மாரீசன் மாயமா னாக உருவெடுத்தான்!
சீதைமுன் நின்றான் கவர்ந்து.

ராமனிடம் சீதையோ  அந்தமான் வேண்டுமென்றாள்!
மாயமான் பின்சென்றான் பார்.

வேகமாக ஓடிய மானைப் பிடிப்பதற்கு
ராமனும் சென்றான் விரைந்து.

அம்பைக் குறிவைத்தே எய்தினான்! மானங்கே
மண்ணில் விழுந்தது காண்.

விழுந்ததும் லெட்சுமணா!  என்றதும் ராமன்
மருண்டான் சூழ்ச்சி அறிந்து.

மாய விளையாட்டை ஆடியது மாரீசன்
தூயமன சீதை கதி?

விரைந்தான் இராமன்! இலக்குவன் ராமன்
நிலையறிய வந்தான் விரைந்து!

அண்ணனும் தம்பியும் சந்தித்தார்! உள்ளத்தில்
மண்டியதே அச்சம் திரண்டு.

சீதை நிலையறிய ராமன் இலக்குவன்
வேகமாக வந்தனர் அங்கு.

அதற்குள் ராவணன் சூழ்ச்சிவலை பின்னி
மடக்கினான் சீதையைத் தான்.

மாறுவேடம் போட்டுவந்தே ராவணன் சீதையைத்
தேரிலேற்றிச்  சென்றான் கவர்ந்து.

தேடிவந்தால் பாதை அறிந்துகொள்ள சீதையோ
வீசினாள் தன்பொருளைத் தான்.

ராம இலக்குவன் ஓடியோடித் தேடினர்!
ஆனமட்டும் சென்றார் விரைந்து.

சடாயுபோர்
ராவணன்  தேரிலேசீதை துடிக்கின்ற
கோலத்தைக் கண்டான் கழுகு.

கழுகரசன் போர்தொடுத்தான் ராவணன் மீது!
கலுழ்ந்தவள் பார்த்தாள் வியந்து.

ராவணன் அம்புகளால் தாக்க கழுகரசன்
தாளாமல் வீழ்ந்தான் தளர்ந்து.

மயங்கி விழுந்தவன் மீண்டும் எழுந்தான்!
மிரண்டான் ராவணன் பார்த்து.

ராவணன் தள்ளாடி வீழ்ந்தான் மூர்ச்சித்து!
தேரழியப்  பார்த்தான்  திகைத்து.

சந்திர காசமென்னும் வாளெடுத்து வீசினான்
அங்கே இராவணன் தான்.

சடாயு சிறகுகளை வெட்டி எறிந்தான்!
தடாலென வீழ்ந்தான் சரிந்து.

குற்றுயிராய் வீழ்ந்தவன் ராம இலக்குவனைப்
பற்றுடன் பார்த்தான் தவித்து.

சீதையை ராவணன் தேரில் கடத்தியதை
பாசமுடன் சொன்னான் பதைத்து.

கழுகரசன் வானுலகம் சென்றுவிட்டான் மாண்டு!
உருகியவர் தேடினார்  தொடர்ந்து
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post