Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 28


“காசில்லை என்றால் மருந்தை திருப்பி கொடுத்து விடுங்கள்” என்ற காசாளர் “நெக்ஸ்ட்” என்றார் அடுத்த கஸ்டமரை நோக்கி.

அவமானத்துடன் அப்பெண் கவுண்டரை விட்டும் விலக கண்ணன் அவளை நெருங்கி “தவறாய் நினைக்க வில்லை என்றால் பணத்தை நான் செலுத்துகின்றேன்” என்றான்.

மிரண்ட கண்களுடன் அவனை அவள் பார்க்கவே அவசரமாக “கடனாகத்தான்” என்றான்.. மிகத் தயக்கத்துடன் “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டாள் அவள்.

“பஸ்ஸில் வரும் போதுதான் பணம் தொலைந்திருக்க வேண்டும்” என்றவள் “எங்கே உங்களை பார்த்து பணத்தை திருப்பி தர இயலும்?” என்றாள் மிக்க தயக்கத்துடன்.

“உங்கள் தொலைபேசி இலக்கம் தாருங்கள்.  நானே கூப்பிட்டு கேட்கின்றேன் என்றான் கண்ணன். 

என்னிடம் “கைபேசி இல்லையே” என்றாள் அவள் நிலம் பார்த்து.  முடிந்தவரை அவன் கண்களை பார்க்காமலே பேசிய விதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

“அதற்கென்ன?  மீண்டும் சந்திக்கலாம் என்று விதி இருந்தால் மீண்டும் சந்திப்போம் என்றவன் திரும்பி நடந்தான். அவள் திகைப்புடன் அவன் செல்வதை பார்த்திருந்தாள்.

வீட்டுக்கு வந்தபின் தான் “அட..அவள் பெயரை கூட கேட்காமல்   விட்டோமே” என்று இருந்தது கண்ணனுக்கு.  அவளின் தயங்கிய பேச்சும், அச்சமும் முதல் முறையாக தோன்றியது கண்ணனுக்கு.  மனம் ஏனோ அந்த நொடியிலேயே காரியாலத்தில் இருக்கும் சரண்யாவுடன் இவளை ஒப்பிட்டு பார்த்தது.

அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு மத்தியான உணவுக்காக வீட்டுக்கு செல்லக் கிளம்பினான் கண்ணன். 

“சார், வயதான ஒருவர் உங்களைக் காண வந்திருந்தார். நீங்கள் மீட்டிங்கில் இருப்பதை சொன்னதும், மீண்டும் வருகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.” என்றாள் சாரண்யா. வந்தவர் தன்னை பற்றிய எந்த விபரமும் தரவில்லை என்றும் சொல்லிவிட்டு நகர்ந்தாள். 

முகஜாடையில் சிவராமனையே உரித்து வைத்திருக்கும். கண்ணனை காணும்  தோறும் எஜமானையே காண்பது போல் உணர்வான் ஆறுமுகம்.  “தாத்தா” என்று வீட்டுக்கு வந்தால் ஆறுமுகத்தையே வளைய வருவான் கண்ணன்.

வெளியே பைக் நிறுத்தும் ஓசை கேட்டு அவசரமாக வெளியே வந்தான் ஆறுமுகம்.  ஆறடி உயரத்துடன் கம்பீரமாக வண்டியில் இருந்து இறங்கினான் கண்ணன்.  “என்ன தாத்தா?  இன்னமுமா சாப்பிடாமல் இருக்கின்றீர்கள்?” என்று செல்லமாய் கடிந்து கொண்டவன், அவசரமாய் முகம் கழுவி விட்டு     சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான்.  
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments