Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-133


குறள் 177.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படவே கூடாது. அதை வச்சு சொகமா இருக்க விரும்புனா, அது எந்த சொகத்தையும்  தராது. 

குறள் 179.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாம இருக்கது நல்லது. இப்படிப்பட்ட கொணம் இருக்கவொகிட்ட  அவங்க தெறமைக்கு ஏத்தாப்புல திருமகள் தானே தேடிவந்து ஒட்டிக் கொள்வா. 

குறள் 180.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

இதுனால என்ன பின் விளைவு வரும்னு தெரியாம அடுத்தவன் பொருளை அமுக்க ஆசைப்பட்டா அது நமக்கு கெடுதலைத் தான் தரும். அதுக்கு ஆசைப்படாம இருந்தா, வாழ்க்கையில வெற்றி தான். 

குறள் 181.
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

ஒருத்தன் நல்லது எதும் செய்யாம, நல்லதை பேசாம இருந்தாக்கூட  பரவாயில்லை, அடுத்தவொளைப் பத்தி ஆவலாதி எதுவும் சொல்லாம இருந்தாலே  போதும். நல்லாயிருக்கும். 

குறள் 182.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

அற வழியைப் பத்தி மோசமாப் பேசி பாவ வேலைகளைச் செய்றதை விட மோசமானது எது தெரியுமா? ஒருத்தரை நேர்ல பாக்கும் போது சிரிச்சு பேசுதமாதரி நடிச்சுகிட்டு, அவரு போன பொறவு மோசமா பேசுதது தான். 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments