கடந்த சில தினங்களுக்கு முன் மருதமுனை அந்-நஹ்லா அரபிக் கல்லூரியில் புனித ரமலான் மாதத்தில் நடந்த கொடூரமான செயல் சம்பந்தமான காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இக்காணொளியில் புனிதமிக்க ரமலான் மாதத்தில் நோன்பு நோற்ற சிறார்களை அவர்களுக்கான தண்டனை என்ற போர்வையில் கடும் வெயிலில் முழங்காலிட்டு நிறுத்திய சம்பவம் வெளியிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இக் காணொளியானது வைரலாக பரவவே, முஸ்லிம் கலாச்சார அமைச்சு, மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவுகள் போன்ற பல தரப்புக்களும் இதில் தலையிட்டு விசாரணை செய்யவே, குறிப்பிட்ட மதரஸாவின் நிர்வாகிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கல்லூரி அதிபரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டு அவர் அப்தவியில் இது நீக்கப்பட்டதோடு மதரசாவின் வழமையானவடிக்கைகளை தொடர அனுமதி வழங்கப்பட்டது.
இதை அடுத்து சர்ச்சைக்குரிய மதரசாவின் நிர்வாகிகளால் சமூகத்திற்கான தெளிவூட்டல் என்ற பெயரில் ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இக்காணொளியில் சமூகத்தை தெளிவுபடுத்துவது இவ்வாறாயினும், ஒரு பக்க சார்பான விமர்சனம் ஒன்றையே காண முடிந்தது.
அதாவது, அதிபர் நல்லவர் என்றும், அவரை புகழ்வதுமாகவும், அசாதரனத்தை அநியாயத்தை வீரத்துடன் தைரியமாக தட்டி கேட்ட குறிப்பிட்ட சகோதரரை திட்டுவதுமாகவே அக்காணொளி அமைந்திருந்தது.
அந்த நிர்வாகிகளின் நியாயப்படி புனிதமிக்க ரமலான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் இக்கொடூர செயலைச் செய்த அதிபர்
நல்லவர், அவர் நிரபராதி. அவர் செய்த செயல் நியாயமானது அதற்குப் பாவம் கிடையாது, இதுதான் இவர்களின் நிலைப்பாடா ?
இதற்காக நியாயம் கேட்டு இதை தட்டி கேட்ட சகோதரர் பொல்லாதவர், குற்றவாளி. அவர் பெரிய பாவமான காரியத்தை செய்து விட்டார். அவர் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டுமாம். அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வேண்டுமாம். சமூகத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் . இதுதான் அவர்களின் சமூகத்திற்கான தெளிவூட்டலா ?
குற்றத்தை கல்லூரி அதிபரிடம் முறையிடவில்லையாம். நிர்வாகிகளிடம் முறையிடவில்லையாம்.
சிறார்கள் வெளியில் காய்வதை அதிபர் மேல்மாடியில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார். வீடியோ செய்த சகோதரர் அவரிடம் முறையிடுகிறார், அவர் கவனத்தில் கொள்வதில்லை. நிர்வாகிகளை தேடிச்சென்று முறையிடும் வரை எந்தனை மாணவர்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்திருப்பார்கள்.
அந்த சகோதரர் அந்த சிறார்களை காப்பாற்ற தன்னால் முடிந்ததை உடனடியாக செய்தார். அவர் அலாஹ்வின் கேள்வியில் இருந்து நீங்கிக் கொண்டார்.
இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் இதனை நிர்வகிக்கும் நிர்வாகிகளே தவிர வழியில் செல்பவர்கள் அல்ல என்பதை முதலில் இவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
நிர்வாகிகளின் வாதப்படி இதை சமூக மட்டத்தில் சமூக முக்கியஸ்தர்களின் கவனத்தில் கொண்டு வந்து, மீண்டும் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு வழி செய்த மீடியாக்கள், மீடியா சகோதரர்கள் மிகவும் கெட்டவர்கள். அவர்களும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மாறாக மதரஸாக்களில் நடக்கும் இவ்வாறான செயல்கள் மறைக்கப்பட வேண்டும். இவை வெளியில் தெரியக்கூடாது. மதரஸாக்கள் என்னும் பெயரில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் எழுச்சி பெற வேண்டும்.
அவை மூலம் மாணவர்கள் மானசீக ரீதியாக வீழ்த்தப்பட்டவர்களாக ஒரு சமூகம் உருவாக்கப்படவேண்டும்,மதரஸாக்களில் மாணவர்கள் கொலை செய்யப்பட வேண்டும்.
இதுவே அவர்களின் வாதமா ?
ஊடக தர்மத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஊடக தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இங்கு ஊடக தர்மம் பாதுகாக்கப்படவில்லை என்பது போன்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
முதலில் ஊடக தர்மம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊடக தர்மம் என்பது உள்ளதை உள்ளபடி சொல்வதே ஊடகதர்மமாகும்.
இங்கு எந்த ஊடக தர்மமும் மீறப்படவில்லை.
இல்லாத ஒன்றை திரிபுபடுத்தி, அல்லது பொய்யான ஒரு தகவலை இட்டுக்கட்டி சொல்லவில்லை. நடந்த கொடூரத்தை உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். ஊடா தர்மத்தை பற்றி பேசி ஊடக தர்மத்தை மீறுபவர்களாகவே இவர்களை காண முடிந்தது.
புனிதமிக்க ரமலான் மாதத்தில் ஈவிரக்கமின்றி பச்சிளம் பாலகர்களை முட்டுக்காலில் சுடும் வெயிலில் நிறுத்திய அதிபரை புகழ்வது தான் இவர்களின் ஊடா தர்மமா ?
நியாயத்தின் பக்கம் நின்று சிந்தியுங்கள்.நெஞ்சில் கையை வைத்து, உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப் பாருங்கள். உங்களின்
மனச்சாட்சியே உங்களுக்கு பதில் சொல்லும்.
மருதமுனையிலிருந்து சம்மாந்துறைக்கு ஏறத்தாழ 15 கிலோமீட்டர் இருக்கும். இந்நிலையில் அங்கு ஒரு மாணவனை கொலை செய்த அந்த மௌலவி,நீண்ட நாட்களாக சிறுவர்களுக்கு கொடுமை செய்துள்ளார்,சித்திரவதை செய்துள்ளார், பிள்ளைகளை மோசமான முறையில் அடித்துள்ளார்.
அத்தனையும் மதரஸா என்ற பெயரில் மறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவன் கொல்லப்பட்ட போதே இவை வெளியானது. இவர்களின் பார்வையில் ஊடக தர்மம் இவைதானா ?
அந்தப் பச்சிளம் பாலகன் தன் இறுதிக்கட்டத்தில் உயிருக்கா போராடும்போது, அவனுக்கு என்ன நினைவில் வந்திருக்கும்.
தாய் தகப்பன், தன் கூட விளையாடும் உடன்பிறப்புக்கள், தன் நண்பர்கள் போன்றவர்களை நினைத்து தன் உயிர் பிரியும் போது என்ன வேதனை பட்டிருப்பான் என்பதை நினைத்தாவது இவற்றை கண்டிக்க உங்களின் மனதில் ஈவிரக்கம் அற்று போனது ஏன்.
ஒரு சிறுவனின் கழுத்தை நெருக்கி கொலை செய்யும் அளவுக்கு தான் மார்கத்தை கற்றறிந்த ஒரு மெளலவின் மிருகத்தனமான உள்ளம் இருந்ததா ?
இவ்வாறான ஒரு கூட்டம் இன்று உலகில் வாழுமாக இருந்தால் அது நெதன்யாகுவின் கூட்டம் மட்டும்தான்.
இறுதியில் 15 வருடங்களாக கட்டிக் காத்து நெருப்புத் தின்று ஆளாக்கிய ஒரு பிள்ளையை ஒரு தாயும் தகப்பனும் இழந்தார்கள்.
இதற்கு வகை சொல்வது யார் ? ஊடக தர்மத்தை பற்றியும் அதிபரின் சிறப்பு தன்மை பற்றியும், மதரஸாவின் பெயர் பற்றியும் கதைக்கும் இது போன்றவர்கள் இவ்வாறான விடயங்கள் நடக்கும் போது பொறுப்புச் சொல்வார்களா ?
முதலில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
"தன் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்" என்ற அழகான, உலகிற்க்கு நியாயத்தை எடுத்துரைக்கும் மார்க்கத்தில் நாம் இருக்கின்றோம்.
இவை மார்க்க அடிப்படையில் நோக்கப்பட வேண்டும், என குறிப்பிடுகின்றார்கள்.
நடந்த கொடூரத்தை தடுத்து, மீண்டும் நடக்காது இருக்க ஆவன செய்வது தான் மார்க்க அடிப்படையா ? அல்லது தற்போதைய காலநிலையை பொறுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள வேளையில் வரம்பு மீறி குற்றம் செய்த அதிபரின் கொடூரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதான் மார்க்கத்தின் அணுகுமுறையா ?
ஆக மொத்தத்தில் இந் நிர்வாகம் மதரஸா ஒன்றை நடத்திச் செல்ல தகுதியற்றவை என்ற தீர்மானத்திற்கே வரவேண்டியுள்ளது.
இவர்களின் நிலையைப் பார்க்கின்ற போதும், இம்மதஸாவில் இது போன்ற செயல்கள் மேலும் அரங்கேரும்போதும் இவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். அதைக் கண்டிக்க மாட்டார்கள்.
மாணவர்கள் கொல்லப்படும் வரை இவர்கள் சொல்லும் ஊடக தர்மத்தை இவர்கள் பாதுகாப்பார்கள்.
அண்மை காலங்களில் மதரசா என்ற பெயரில் என்ற சித்திரவதை முகாம்களின் கொடூரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வெளி வராதவை ஏராளம்.
காலியில் ஒரு மதரசா மாணவன் மிருகத்தனமாக தாக்கப்பட்டான். சென்ற வாரம் தர்கா நகரில் ஒரு மாணவன் தாக்கப்பட்டான். அவையும் மூடி மறைக்கப்பட்டது.
இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்ற போது இதுதானா இஸ்லாம் என்ற என்னத்தை இஸ்லாத்தைப் பற்றி அறியாத மக்களின் மனதில் ஒரு தப்பான அபிப்பிராயம் நிலை கொள்ளாதா ?
இந்நிலமை தொடருமாக இருந்தால் இலங்கையில் மதரஸாக்கள் தடை செய்யப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இவை வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்று மெளலவி வேடத்தில் வெளிவந்துள்ள அழுகோசுகள் சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். மதரஸாக்களில் இருந்து இவர்கள் ஆற்றப்பட வேண்டும். மதரஸாக்களின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவற்றை தடுத்து புனிதமிக்க ரலான் மாதத்தில் அந்த சிறுவர்கள் நேற்ற நோன்பையும், அவர்களது அரோக்கியத்தையும் பாதுகாத்த நற்கூலியை அந்த சகோதரனுக்கு அல்லாஹ் நஸீபாக்குவானாக. ஆமீன்
பேருவளை ஹில்மி
=====
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments