Ticker

6/recent/ticker-posts

மாஸ்கோ துப்பாக்கிச்சூடு... 100-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றிய 15 வயது சிறுவன்.. குவியும் பாராட்டு!


மாஸ்கோவின் சிட்டி ஹாலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றிய 15 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஒரு சிட்டி ஹாலில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 143 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுவன் ஒருவர் அந்த சிட்டி ஹாலில் இருக்கும் மக்களை காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த சிறுவன் பெயர் இஸ்லாம் கலிலோவ். 15 வயதே ஆன இவர் அங்குள்ள ஒரு கடையில் பகுதிநேர சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியபோது அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மக்களை அவர் பாதுகாப்பாக வெளியேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இது குறித்து ரஷ்ய செய்தி தொலைக்காட்சி “ருப்ட்லிக்கு” பேட்டி அளித்த அவர், நான் வேலை செய்துக்கொண்டிருந்த போது கூட்டம் கூட்டமாக மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அதை பார்த்ததும் அங்கு ஏதோ தாக்குதல் நடக்கிறது என்பதை நான் புரிந்துக்கொண்டேன். உடனடியாக நான் அங்கிருந்தவர்களை எமர்ஜென்சி எக்சிட் வழியாக வெளியேற்றினேன்.

நான் ஹீரோ இல்லை. ஆனால் என் ஒரு உயிருக்காக 100-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுக்க என் மனது இடம் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது கண்முன் தீவிரவாதிகள் மக்களை சுட்டுகொன்றதை பார்த்ததாகவும், தனது தாய் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

news18


 



Post a Comment

0 Comments