அகமதாபாத் : ஐதராபாத் அனிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. ஐதராபாத் அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர்.
குஜராத் அணி தரப்பில் அனுபவ வீரர் மோகித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் சாஹா தொடக்கத்திலேயே அதிரடியாக பேட்டிங் செய்ய, சுப்மன் கில் அடக்கி வாசித்தார். இந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது.
அப்போது ஷாபாஸ் அஹ்மத் வீசிய பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்து சாஹா 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். இவர் சுப்மன் கில்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவைக்கேற்ப சில பவுண்டரிகளை விளாசியதால், பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 52 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் அதிரடியாக விளையாட முயன்ற சுப்மன் கில் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து மார்க்கண்டே பவுலிங்கில் வெளியேறினார்.
இதன்பின் விஜய் சங்கர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டேவிட் மில்லர் களமிறக்கப்பட்டார். அவரும் சாய் சுதர்சனும் இணைந்து 15 ஓவர்கள் வரை மிகுந்த கவனத்துடன் விளையாடினர். சாய் சுதர்சன் சில கேப்களை பயன்படுத்தி பவுண்டரியை விளாசினார். இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 49 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத் அணி தரப்பில் மார்க்கண்டே அட்டாக்கில் வந்தார்.
அந்த ஓவரில் டேவிட் மில்லர் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடிக்க, மறுமுனையில் நின்றிருந்த சாய் சுதர்சனும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் குஜராத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் இணைந்த விஜய் சங்கர் - மில்லர் கூட்டணி வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக 19.1 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் குஜராத் அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments