Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-34


166. வினா : ஊர் யாரைப் பழித்துப் பேசும்?
விடை : பிறரைக்குறை கூறி புறஞ்சொல்லி வாழ்பவரை
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.(186)

167. வினா : நல்ல உறவுகளைப் பிரித்து விடுபவர் யார்?
விடை : பிறர் பழி பேசும் நற்பண்பு இல்லாதவர்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.(187)

168. வினா : எல்லோராலும் இகழப்படுபவர் யார்?
விடை : பலர் வெறுக்கும் பயனற்ற சொல் கூறுபவனை 
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.(191)

169. வினா : ஒழுக்கமற்றவன் என்பதை எது காட்டும்?
விடை : பயனற்ற பேச்சை விரித்துப் பேசும் தன்மை 
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.(193)

170. வினா : பயனில சொல் பேசுவதால் எவை நீங்கும்?
விடை : சீரும், சிறப்பும் 
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில் நீர்மை யுடையார் சொலின்.(195)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments