Ticker

6/recent/ticker-posts

தேனும் எழுத்தும்!


ஆலமரம் விழும் முன்னரே
பறக்க தொடங்கியது
பறவைகளின் கனவுகள்

பசி தீர்க்க எறிந்த
ரொட்டித்துண்டில்
பாசத்தின் இனிப்பு குறைவு

திகட்டிய அன்பில்
ஒரு துளி தேனாகிறது
சலிப்பு மறந்த தருணங்கள்

கைரேகை கோடுகளில்
பாதைகள் மட்டும்
மூடியபடியே அமைகிறது

இதிகாசங்களில்
வண்ணங்கள் தூரிகைகளின்
வசம்தான் மாற்றப்படுகின்றன

தொட்டில் நகர்த்தி
பார்த்து சிரிக்கிறது
பசியின் ரூபத்தில்
அன்னையை பார்த்த குழந்தை

சே கார்கவி கார்த்திக்


 



Post a Comment

0 Comments