Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -40


குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் 
கனவினால் காதலர் நீங்கலர் மன்.

அம்மா நம்ம சாரு அக்காவோட 
குட்டிப்பாப்பா இருக்காளே 
அவ என்கனவுல வந்தாம்மா! 
மழலையில பேசுபேசுன்னு 
பேசினாம்மா! சிரிச்சு 
ரசிச்சுக்கிட்டு இருந்தேம்மா! 
திடீர்னு முழிச்சிட்டேம்மா! 
இந்த விழிப்புவந்து 
கெடுக்காம இருந்திருந்தா 
மெய்மறந்து ரசிச்சுக்கிட்டே 
பிரியாம இருந்திருப்பேம்மா.

குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் 
கனவனால் என்எம்மைப் பீழிப் பது.

அம்மா இந்த அக்கா 
இங்கேயே படிச்சிருக்கலாம்மா! 
என்னோட வம்பிழுத்து 
என்ன அழவைப்பா! 
அது ஒருமகிழ்ச்சிதாம்மா!
இப்ப வெளியூர்லபடிக்கிறா! 
அவசெஞ்ச குறும்பெல்லாம் 
ஞாபம்வருது! நேரா 
இருந்து அன்புகாட்டாத 
அக்கா என்கனவுல 
வந்து பிரிவுத் 
துயரைப் பெரிசாக்குறாம்மா! 
கொடுமை!

குறள் 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி 
விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

கனிமொழி! 
நம்ம தமிழாசிரியை 
வீட்ல மாலைநேர 
வகுப்புக்கு போகும்போது 
கொஞ்சநேரம் அவங்க 
தம்பிப் பாப்பாவோட 
வெளாடுவோம்ல! 
கொஞ்சக் கொஞ்ச 
கொஞ்சனும்போல இருக்கும்ல! 
ஆமாண்டி!
அந்தத் தம்பிப்பாப்பா 
கனவுல வந்தாண்டி! 
வந்து தோள்ல படுத்துக்கிட்டான்! 
ஆகான்னு முழிச்சுப்பாத்தா 
வேறெங்கேயும் போகாம 
என்மனசுக்குள்ள 
விரைந்து நுழைஞ்சுக்குறாண்டி!

குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் 
கனவினால் காதலர்க் காணா தவர்.

அம்மா அங்கயற்கண்ணி நம்மதோழி 
மங்கைய நாலஞ்சுநாளா பாக்கவேமுடியல! 
என்ன ஆச்சு? அவ தாத்தா 
மருத்துவமனையில இருக்காராம்!
அதான் வீட்டவிட்டு
வெளியில் வரல! 
எனக்கு கனவுலவராஅவ! 
கனவுல பாக்காதவங்கதான் 
நேரிலே பாக்கமுடியலன்னு 
நொந்துக்குவாங்க! ம்! 
நீகொடுத்துவச்சவ.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments