கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-9

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-9


அயோத்தியாஇது?
நுழைந்தான் அயோத்தியில்! காட்சியின் கோலம்
அலங்கோலம் என்றுணர்ந்தான்  நின்று.
ஆரவாரம் எங்கே?அழகான கோலமெங்கே?
ஓலங்கள் கேட்கிறதே ஏன்?
உள்ளத்தில் அச்சம் குடியேற ஓடினான்
பிள்ளையோ தாயிடந் தான்.

கைகேயிஅரண்மனையில்பரதன்
உன்தந்தை வானழைப்பை ஏற்றேதான்  விண்ணுலகம்
சென்றுவிட்டார் இவ்வுலகை நீத்து.
என்மகனே நீயாள இராமன் தவவாழ்வை
கண்டுவாழ காடேகி னான்
தாய்சொன்ன செய்தி இடியாய் இறங்கின
தாய்தானா? நின்றான் மலைத்து
அன்னையின் வஞ்சகம் கண்டுணர்ந்தே கோசலை
கண்முன்னே நின்றான் துடித்து.

அன்னையின் சூழ்ச்சிக்கு நானுடந்தை அல்லதாயே!
உண்மை எனச்சொன்னான் நொந்து.

எந்தாய் வயிற்றில் பிறந்ததுதான் குற்றமென்றான்
அங்கே துடித்தான் கலுழ்ந்து.

தசரதன் உயிர்நீத்தோ எட்டாம்நாள் இன்று!
மகன்கடமை செய்தல் முறை.

வசிட்டன் சொன்னான் பரதன் உடன்சென்றான்
தசரதனைப் பார்த்தழுதான் நொந்து.

என்கடன் நான்முடிப்பேன் என்றான்! வசிட்டரோ
அவ்வுரிமை இல்லை உனக்கு

கொஞ்சம் விளக்குங்கள்  என்றே பரதனோ
பண்புடன் கேட்டான் தவித்து

மன்னன் சடலத்தை நீதொடக் கூடாது!
மன்னனின் ஆணை இஃது.

சத்ருக்கன் ஈமக் கடன்செய்தான்! மன்னனோ
சொர்க்க மடைந்துவிட் டான்

தலைவனற்ற நாடாய் இருக்கலாமா? என்றே
அலைபாய்ந்து நின்றனர் அங்கு.

அமைச்சர்கள்கருத்து
மன்னனற்ற ஆட்சியின் நிர்வாகம் சீர்கெடும்!
மன்னன் மணிமகுடம் தாங்கு!

அண்னன் இருக்க இளவல் அரசனா?
என்மனம் ஏற்கவில்லை யே!

ராமனிங்கு வந்தால் தடையுண்டோ? சொல்லுங்கள்!
தேனிசையாய் கேட்டனர் அங்கு.

ராமனை அழைப்பேன்! வரவில்லை, கானகத்தில்
ராமனுடன் வாழ்வேன்நான் சொல்.

மரவுரி ஆடை அணிந்தேதான் சென்றான்
பரதன்த வக்கோலம் பூண்டு.

ராமனைக் காண்பதற்குச் செல்லுதல்
 கூனியும் கூனியின் கைப்பாவை கைகேயி
கூட்டமுடன் சென்றனர் பார்.

கங்கைக் கரையை அடைந்தனர்! அப்படை
முன்னேறிச் சென்றது பார்.

தூசியைக் கண்டதும் குகனிடம் செய்தியை
ஊதிவிட்டார் ஓடி விரைந்து.

பரதன் ,குகனின் அனல்பேச்சைக் கேட்டு 
இவன்யார் எனக்கேட்டான் அங்கு.

கங்கைக் கரைவாழும் குகனோ இவன்தான்!
சொன்னான் சுமந்திரன் பார்த்து.

கங்கைப் பரப்பே நிரம்பும் அளவிற்குச்
சென்றன ஓடங்கள் பார்.

இங்குநீ வந்ததேன்? கேட்டார் பரத்துவாசர்!
தன்மன ஓட்டத் துடன்.

ராமனை நாடாளக் கேட்பேன்! மறுத்துவிட்டால்
மாள்வேன் உறுதியென்றான் பார்.

ராமன் இருக்குமிடம் நோக்கி அனைவரும்
பாமணக்கச் சென்றார் திரண்டு

பரதனின் சேனையைக் கண்டு வெகுண்டான்
சுழன்றே இலக்குவன் அங்கு.

இலக்குவனைத் தேற்ற அரும்பாடு பட்டான்
சிலைராமன்! பெருமூச்சு விட்டு.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post