Ticker

6/recent/ticker-posts

கருக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியமும்


கருக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியமும்
எனது வயது 24. திருமணம் முடித்து ஒரு வருடமாகிறது. ஆனால் இதுவரை பிள்ளைப் பாக்கியம் இல்லை. கருக்கட்டல் தொடர்பான போதிய விழிப்புணர்வு எனக்கு இல்லை. பலரும் பல ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். எவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கட்டலுக்கான சாத்தியம் அதிகம்? எவ்வாறான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.? இது பற்றி எம்மைப் போன்ற பல தம்பதிகள் போதிய விளக்கமில்லாதிருக்கி றார்கள்.
சிபானா, கேகாலை

பதில்: மகப்பேறின்மை அல்லது Infertility என்பது தொடர்ச்சியாக ஒரு வரு, டத்திற்கு அல்லது அதற்கு மேல் கலெகத் திலிருந்து முட்டை வெளியேறும் காலங் களில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டும் கருகட்டாத நிலையைக் குறிக்கும் இந்நிலை நவீன மருத்துவத்துறைக்கு கூட ஒரு சவாலாகவே உள்ளது. காரணம் பிள்ளைப் பாக்கியமற்றவர்களைப் பல பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் கூட அநேகமானவர்களது ஆய்வு கூடப் பரிசோதனைகளில் எதுவிதமான வித் தியாசங்களையும் காண முடியாமல் இருப்பதாகும். மகப்பேறின்மை கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல் லது சில வேளைகளில் இருவரிலுமோ காணப்படுகின்ற குறைபாடுகளினால் ஏற்படலாம்.

நான் சென்ற சில வாரங்களுக்கு முன் இது விடயமான கேள்வியொன்றுக்கு ரிய பதிலில் மாதவிடாய் சக்கரத்தில் ஒரு சில தினங்களில் தாம்பத்திய உறவு கொண்டால் மாத்திரம் தான் கருக்கட்டல் நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

அதாவது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த நாட்களில் தான் கருக்கட்டலுக் கான வாய்ப்பு அதிகம் என்பதாகும். இது விடயமாக விளக்கம் ஏற்படுத்தும் படியும் இங்கு கேள்வி கேட்டிருக்கும் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இளம் சந்ததியினருக்கு திருமண வாழ்க்கையின் உண்மையான தத்துவம் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தேவையான அறிவு போன்ற முக்கிய விடயங்கள் தெரியாமல் இருப்பதும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் பிள்ளைப் பாக்கிய மின்மைக்கும் முக்கிய காரணமாகும்.

மேற்குறிப்பிட்டுள்ள வரைவிலக்க ணத்தின் படி சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த நாள் தம்பதிகள் வாழ்வில் ஈடு பட்டால் மாத்திரமே கருக்கட்டக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பது ஒரு முக்கிய மான விடயமாகும். இவ்வாறு சூலகத்தி லிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு Ovulation என அழைக்கப்படும்.

எனவே இந்த முட்டை வெளியேறும் தினத்தை அறிந்து கொள்வது எப்படி என்பது ஒரு முக்கியமான விடயமாகும். சராசரியாக 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு பொது வாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளி லிருந்து 14 ஆம் நாள் தான் Ovulation எனப்படும் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு ஏற்படும். எனவே இக்குறிப்பிட்ட தினத்திலிருந்து ஒரு சில நாட்களுக்குத் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருக்கட்டக் கூடிய சாத்தியம் அதிகம். ஆயினும் 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு பொது வாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளி லிருந்து 14 ஆம் நாள் தான் Ovulation எனப்படும் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நிகழ்வு ஏற்படும். எனவே இக்குறிப்பிட்ட தினத்திலிருந்து ஒரு சில நாட்களுக்குத் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருக்கட்டக் கூடிய சாத்தியம் அதிகம். ஆயினும் 28 நாட்க ளுக்கு முன் அல்லது பின்பு மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு 14 ஆம் நாளில் முட்டை வெளியேறுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இவர்களுக்கு ஒரு சில நாட்கள் முந்தியோ அல்லது பிந்தியோ முட்டை வெளியேறலாம்.

எனவே மருத்துவ அறிவு இல்லாத பெண்கள் முட்டை வெளியேறுவதை எவ்வாறு தெரிந்து கொள்வது? இதை உடம்பில் வெளிக்காட்டக் கூடிய சில குறிகுணங்களை வைத்து ஊகித்துக் கொள்ளலாம்.

அதாவது சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதற்கு முதல் நாளிலி ருந்தே மார்பகம் இறுக்கமாக இருத்தல், உடம்பின் வெப்பநிலை கூடுதல்,

வயிற்றின் கீழ் இடது அல்லது வலது பக்கத்தில் பிடிப்புடன் கூடிய வலி, பெண் உறுப்பிலிருந்து ஒரு வகைத் திரவம் வெளியேறுதல், வயிறு ஊதுதல் தலை யிடி, குமட்டல் முகபாவத்தில் மாற்றம் ஏற்படல் போன்றவைகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறி களோ காணப்படலாம். 

ஒரு சில பெண்களுக்கு எதுவிதமான அறிகுறிகளும் காணப்படாமலும் இருக் கலாம். உடம்பின் வெப்பநிலையை வெப்பமானியைப் பாவித்து சாதாரண மக்களும் தெரிந்து கொள்ளலாம்.

மேற் கூறிய அறிவுரைகளை கவ. னத்திற் கொண்டு தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டும் தொடர்ந்து 1 வருடத்திற்கு கருக்கட்டாமல் இருக்கும் நிலையே பிள்ளைப் பாக்கியமின்மை எனக் கருதி அதற்குரிய பரிசோதனைகளும் சிகிச்சை களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்குரிய பரிசோதனைகளை மேற் கொள்ளும் போது ஆண்களே முதலில் பரி சோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். காரணம் பெண்களுக்கான பரிசோதனை களுக்கான கட்டணம் அதிகம் என்பதால் ஆகும். எனவே கணவனில் ஏதும் குறைகள் காணப்படாத போது தான் மனைவியை பரிசோதிக்கின்றார்கள்.

இன்று எமது சமூகத்திலுள்ள பெரும் நோய்களில் ஒன்று தான் திருமணத் தம்ப திகளுக்கு திருமண வாழ்க்கை பற்றி அறி வுரைகளை கொடுக்கின்றோமா? இல்லை.

இதற்கு மாறாக திருமணத் தம்பதி களின் குடும்ப அங்கத்தவர்கள் திருமண வைபவத்தைச் சிறப்பாக நடாத்துவதி லேயே கண்ணும் கருத்துமாக இருக்கின் றார்கள். எனவே ஒவ்வொரு கிராம் மட் டத்திலும் குடும்பம் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை முறை பற்றி விழிப்புணர்வை தொடர்ந்தும் மேற்கொள்வதன் மூலம் திருமணத் தம்பதிகளுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 

பிள்ளைப் பாக்கியமின்மைக்காகப் பாவிக்க கூடிய மருந்துகள் விஷேடமாக ஹோர்மோன்கள் அதிகம் பக்கவிளைவு களை ஏற்படுத்தக் கூடும். எனவே இதற் காக விசேட பயிற்சி பெற்ற மகப்பேற்று வைத்தியர்களை நாடி சிகிச்சை பெறு வதே நன்று.

யுனானி வைத்தியத்துறையிலும் இதற் கான பக்கவிளைவுகளற்ற பல விசேட சிகிச்சை முறைகள் இருப்பதோடு பெண் நோய்களுக்கான விசேட பட்டப்பின் படிப்பை மேற்கொண்ட பல யுனானி வைத்தியர்களும் உள்ளனர்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது பிள்ளைப் பாக்கியமற்றவர்களை 'மலடி' என எமது சமூகத்தில் அழைப்பது ஒரு சர்வசாதாரண விடயமாக தோன்றலாம். ஆனால் இந்தச் சொல் மனநல ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்களை "மலடி” எனக் கூறுவதற்குப் பதிலாக மனத் தாக்கத்தை ஏற்படுத்தாது "மகப் பேறின்மை நிலை” அல்லது "பிள்ளைப் பாக்கியமின்மை" போன்ற மிருதுவான மனத் தாக்கத்தை ஏற்படுத்தாத சொற்களைப் பாவிக்கும்படி கூறுகிறேன்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments