Ticker

6/recent/ticker-posts

மலேசியா சுதந்திரதினம்!


மலேசியா  சுதந்திரத்தை 
நேசித்துக் கொண்டு இருக்கும் 
மூவின மக்களும் கூடி நின்று 
சுவாசிக்கும் நாள் 
முப்பத்தியோராம்  திகதி.

ஒன்றாக இணையும் கரங்கள் 
அன்றைய நாள் 
ஒன்றென ஒலிக்கும் குரல்கள் 
ஒரே மொழி  மெர்டேகா  மெர்டேகா 
மெர்டேகா என்னும் ஒலி.

பொது இடங்கள் இல்லத்தின் 
வாசல் அரச கட்டிடம்
எங்கும் காற்றுடன் சண்டையிடும் 
மலேசியா சுதந்திரக் கொடி .

திறந்த இல்ல உபசரிப்பு 
மக்கள் வாய் மலர்ந்து சிரிப்பு  
நாளும் உழைக்கும் 
தொழிலாளிக்கு விடுமுறை  தினம்.

ஒலி அலையில் 
தொடரும் வாழ்த்து மழை
காணும் நேர்காணல்  
அனைத்தும்  நினைவின் அலை.

தொலைக்காட்சி  
பெட்டியிலே வித விதமான
சுதந்திரத்தை மையப்படுத்தும் 
சினிமாக் கதை. 
இடையிடையே மெர்டேகா 
என எழுந்திடும் ஓசை. 

வானூர்தியும் மலேசியா 
 சுதந்திரத்தின்
அடையாளச் சின்னமான 
வண்ணக் கொடியை சுமந்த படி 
குறுக்கும் நெறுக்கும் பறக்க
பாதை எங்கும் படை வீரர்கள் 
பரவசத்தோடு அணி வகுக்க
 மக்கள் மனம் மகிழ்சிப் பெருக்கு.

படை வீரர்களின் சாகாச விளையாட்டும் 
துப்பாக்கி  சத்தமும் 
இராணுவ வாகனத்தின்  ஊர்வலமும் 
வீரர்களுக்கான மரியாதை அணிவகுப்பும் 
பார்ப்போரை பிரமிக்க வைக்கும்.

மகிழ்வோடு முழுமையான 
சுதந்திரத்தை அனுபவிக்கும் 
மலேசியா மக்களை சுமந்து 
உள்ள மண்ணில் நாமும் உண்டு.

வாழ்த்துவோம் மனம் திறந்து  
நல் ஆட்சி  சிறக்கட்டும் 
நாட்டின் புகழ் பெருகட்டும் 
மூவினத்தோரும் 
முத்தாக ஜொலிக்கட்டும் 
அன்பு நிலைக்கட்டும் 
ஒற்றுமையே பலம்  ஓங்கட்டும்.

மெர்டேகா மெர்டேகா மெர்டேகா.
சுதந்திர தினத்தை வரவேற்கும்
மலேசிய நண்பர்கள் அனைவருக்கும்
எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்  :-)


Post a Comment

0 Comments