முகமூடி!

முகமூடி!


இன்னாருக்கென்று
செய்யப் படுவதுமில்லை
விற்கப் படுவதுமில்லை
முகமூடிகள்.
முகமூடிகளுக்கு மனிதர்களிடையே 
கிராக்கிகள் அதிகம்.
அவரவர்
முகத்துக் கேற்ப
பொருந்தும் முகமூடிகளை
அவரவர்களே
செய்து கொள்ளும்படி
பணிந்து விட்டிருக்கிறது காலம்.
ஒருவருடைய முகமூடி
வேறொருவர் முகத்துக்கு
நிச்சயமாகப்
பொருந்துவதில்லை.
எப்போதும்
முகமூடிகள் முகத்தை மூடியே
வைத்திருப்பதால்
முகமூடிகள் அவிழும் கணத்தில்
அம்பலமாகி விடுகிறது
அகமுகங்கள்.
இங்கு
முகமூடிகள் தேவைப்படும் 
மனிதர்களே அதிகம் என்பதால்
இதைப் போட்ட பிறகுதான்
போலியாய்
பலர் ஜெயிக்கிறார்கள்
வீம்பாய்ச்
சிலர் தோற்கிறார்கள்.

 


Post a Comment

Previous Post Next Post