மோகத்தின் விலை -47

மோகத்தின் விலை -47


அன்று மாலை யதேச்சையாக காபிஷாப் அருகே வண்டியை நிறுத்த அங்கே ஏற்கெனவே
நண்பிகளுடன் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த சரண்யா கண்ணனை நோக்கி வந்தாள்.  ஆவலுடன் இருந்த பெண்கள் கோஷ்டியின் சப்தமே அந்த ஹாலில் பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது.

“ஹலோ சார்,  என்னிடம் ஒருநாளாவது நீங்கள் சிரித்துப் பேசியதே இல்லை.  எனக்குத் தெரியும் அன்று ஆபிசுக்கு வதிருந்தாளே ஒருத்தி.  அந்த ஒய்யாரி தானே உங்கள் மனதை மாற்றியது” என்றவள் “வாழ்த்துக்கள்” என்றாள் குரலில் பொறாமையுடன்.

துணுக்குற்ற கண்ணன் மனதில் சில மத்தாப்புகள் வெடித்தன.  ‘நீ என்ன சொல்கின்றாய்?’ என்று எதிர்க்க தோன்றினாலும் ஓவியாவை நினைத்து அவள் சொன்னதை மனது விரும்பத்தான் செய்தது.      

ஓவியா அந்த நிமிடமே அவன் மனதுள் வந்து போனாள். அந்த இனிமையான நினைவில் தன்னை அறியாமலே தன்னை தொட்டுச் சென்ற காற்றை ரசிக்கத் தோன்றியது கண்ணனுக்கு. முன்னாள் தெரிந்த பாதையில் தனக்காக நிறைய மலர்கள் தூவி அதில் தானும், ஓவியாவும் கரம் கோர்த்து நடப்பது போல் எண்ணத் தோன்றியது.  தானே நினைத்துப் பார்க்காத கோலத்தில் சரண்யா தன்னையும் ஒவியாவையும் இணைத்துப் பேசியது, அவனுக்கு கோபத்தை தூண்டாமல் ‘ஆகா’ என்று அவளைப் பாராட்ட தோன்றியது. ஏதோ கனவில் மிதப்பது போல், பைக்கை தள்ளிக் கொண்டே நடந்தான் கண்ணன்.

“ஹலோ சார்,  பாதையை பார்த்து போங்கள்” இனிமையான குரல் ஒன்றின் அழைப்பினால் தன்னிலைக்கு திரும்பினான் கண்ணன்.  திட்டிக் கொண்டே சப்தமாக ஹாரனை அடித்துக் கொண்டே அவனைத் தாண்டி சென்றான் லாரி டிரைவர்.

அசட்டு சிரிப்புடன் தன்னிலைக்கு வந்த போது அவன் முன் நின்றுக் கொண்டிருந்தாள் ஓவியா. பாதையை தான் பார்த்து வராதற்கு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள் ஓவியா.  ஆனால் அவள் சொன்ன எதுவும் அவன் காதில் கேளாமல் கனவுலகில் மிதப்பது போல் தன்னை மறந்து அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கண்ணன்.

“ஹல்லோ சார்” என்று அவன் முகத்துக்கு முன்னாள் தன் கைகளை தட்டினாள் ஓவியா. அதனால் தன்னிலைக்குத் திரும்பிய கண்ணன் “சாரி” என்றான்.

செயற்கை பூச்சு எதுவும் இல்லாமல் அந்த மாலை நேர இதமான வெயிலில் தங்கச் சிலையாக காட்சியளித்தாள் ஓவியா.  என்ன பேசுவது என்றறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.

“கடவுள் தான் உங்களை அனுப்பி வைத்திருக்கின்றான். என்னை காப்பாற்ற வந்த தேவதை நீங்கள்” என்று உளறினான். அவன் கூறிய வார்த்தைகளினால் வெட்கத்துடன் தலை குனிந்தாள் ஓவியா.  

(தொடரும்)






Post a Comment

Previous Post Next Post