Ticker

6/recent/ticker-posts

இருதய நோயிலிருந்து மீள என்ன வழி?

Dr. விடிவெள்ளி அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் எனது வயது 75. நான் இருதய நோய் காரணமாக 12 வருடங்களாக மருந்து எடுக் கின்றேன். சுமார் 4, 5 வருடங்களாக ஹேர்னியா தொப்புளுக்குச் சமீபமாக உள்ளது. இப்போது ஒரு தோடங்காய் அளவு பெருத்துள்ளது. இருதய நோய் இருப்பதால் நினைவு மாற்றி ஹேர்ணியா ஒபரேஷன் செய்யலாமா? மேலும் வலது முழங்காலில் நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழங்காலுக்குக் கீழ் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஏறு வதும் இறங்குவதும் மிகமிக கஷ்டமாக உள்ளது. மேல்குறிப்பிட்ட நோய்களுக்கு யூனானி மூலம் வைத்தியம் செய்யலாமா?
எம்.எஸ்.எம். அப்துல் குத்தூஸ், அவிசாவளை


இருதயம் என்பது இரு வேறுபட்ட கோணங்களில் எமது சுகவாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதாவது உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணுவதில் இருதயம் ஒரு முக்கியமான உறுப்பாகும். இருதயத்தில் இருந்து ஆரம்பிக்கும் பெருநாடி மூலம் தான் எமது முழு உடம்பிற்குமான ஒக்சிசன் மற்றும் ஊட்டப் பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் அல்லாஹ்வினால் விரும்பப்படுகின்ற அன்பு பாசம் கருணை அமைதி போன்ற எமது உள் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்ட நற்பண்புகளின் இருப்பிடமும் இருதயமேயாகும். எனவே தான் ரசூல் (ஸல்) அவர்கள் கூட இருதயத்தைப் பற்றிக்கூறும் போது உங்கள் உடம்பில் ஒரு சதைக்கட்டியுள்ளது. அது சீர்பெற்று விட்டால் சகல விடயங்களும் சீர்பெற்று விடும் என்ற கருத்துப்படக் கூறினார்கள். 

எனவே இந்த இருதயத்தையும் அதனைத் தொடரும் இரத்த நாடிகளையும் நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பெற்றோல் நிலையங்களுக்கு பல ஆயிரக்கணக்கான லீற்றல் பெற்றோலைக் கொண்டு செல்லும் வாகனம் இயங்குவதற்கு பிரத்தியேகமாக ஒரு சிறிய பெற்றோல் தாங்கியில் இருந்து தான் பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது. இக் கிறிட பெற்றோல் தாங்கியில் இருந்து ஏதாவது ஒரு காரணத்தால் பெற்றோல் விநியோகம் தடைப்பட்டால் அந்த வாகனம் இயங்காது பெற்றோல் பௌசரில் எவ்வளவு பெற்றோல் இருந்தாலும் பிரயோசன மேற்படாது.   

இதே போன்று தான் எமது முழு உடம் பிற்கும் இரத்தத்தைப் பாய்ச்சக் கூடிய | இருதயத்திற்கு குருதியை விநியோகிப்ப தற்காக வேண்டி பிரத்தியேகமான இரத்த நாடிகள் (Coronary arteries) உள்ள ன. இந்த இரத்த நாடிகள் கொலஸ்ரோல் போன்ற பொருட்களினால் அடை பட்டால் இருதயம் இயங்காது நின்று விடும். ஒரு நிமிடத்திற்கு மேல் இருத யத்திற்கான இரத்தம் தடைப்பட்டால் இருதயத் தசைகளின் ஒரு பகுதி இறந்து விடும். இதையே ஹாட் அட்டாக் அல் லது மாரடைப்பு எனக் கூறுகின்றோம். | எமது உடம்பில் ஏனைய பகுதிகளில் எவ்வளவு இரத்தம் இருந்தாலும் அது இதயம் இயங்குவதற்கு பிரயோசனப்ப டாது. இந்த மாரடைப்பின் அறிகுறியாக நெஞ்சுப்பட்டை எலும்புக்குப் பின்னால் அல்லது இடது புறமாக தாங்க முடியாத நெஞ்சு நோவு இருப்பதோடு இடது கை, கழுத்து, வயிற்றின் மேல் பாகம், கீழ்த்தாடை போன்ற பகுதிகளுக்குப் பரவும். அத்துடன் மூச்சுக் கஷ்டம், வியர்வையுடன் உடம்பு குளிர்தல், வாந்தி சில வேளைகளில் தோற்பட்டை களுக்கிடையில் நோவு போன்றவைகள் இருக்கும்.

எனவே இந்த இருதய நோய்கள் வராமல் பாதுகாப்பது எப்படி இது நாம் உட்கொள்ளும் உணவுகள் தேகப்பயிற்சி அமைதியான மண நிலையை பேணல்  மற்றும் புகைத்தல், மதுபானம் அருந்துதலை தவிர்த்தல் போன்றவைகளில் தான் தங்கியுள்ளது உணவைப் பொறுத்த பெரையில் தானிய வகைகள், கீரைவகைகள் பழவகைகளைக் கூடுதலாக உட் கொள்ள வேண்டும். முக்கியமாக தானிய வகைகள் எள்ளு, இஞ்சி, வெங்காயம் போன்றவைகளை உணவில் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இறைச்சி, உப்பு, கோதுமை மா, அதிக சீனி, பொரித்த உணவு வகைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனக்கு இருதய நோய், ஹேர்னியா, மூட்டுக்கால் வலி மற்றும் கால் வீக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருதய நோய் இருப்பதால் ஹேர்னியா ஒப்ரேஷன் செய்யலாமா எனவும் கேட்டுள்ளார்.

பல வகையான இருதய நோய்கள் உள்ளன. நீங்கள் இக்கேள்வியுடன் அனுப்பியிருக்கும் தகவல்களின் படி நான் மேலே குறிப்பிட்டுள்ள இருதய நாடிகளில் ஒன்று பூரணமாக அடைபட்டும் இன்னுமொரு நாடி பகுதியளவிலும் அடைபட்டுள்ளது. எனவே இந்நிலையைச் சத்திர சிகிச்சை மூலம் குணமாக்குவதே மிகச் சிறந்தது. அத்துடன் உங்களது ஹேர்னியா ஒப்ரே சனையும் இருதய நோய் நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன் செய்து கொள்ளலாம். 

இன்று தொழில் நுட்பம் வெகுவாக முன்னேறியுள்ளமையினால் பூரணமாக மயக்கத்தை உண்டு பண்ணாமல் பகுதியளவில் அதாவது சத்திர சிகிச்சை செய்யக்கூடிய இடத்தை மாத்திரம் விறைப்படைய செய்யும் சத்திரை சிகிச்சை முறைகளும் உள்ளன  மேலும் நீங்கள் உங்களது இரு கால்களும் வீக்கமடைந்து இருபதாக குறிப்பிட்டுள்ளீர்கள் காலகள் வீக்கமடைவதற்கு இருதயம் பலவீனமடைதல் மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவை  காரணங்களாக இருக்கின்றன. எனவே நீங்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனை பெறுதல் நன்று.

யூனானி வைத்திய முறைப்படி இருத யத்திற்கென்றே பிரத்தியேகமான சில விட்டமின்களும் மருந்துகளும் உள்ளன. இது காடியக் டானிக் எனக் கூறப்படும்.

ஆகவே இக்காடியக் டானிக்குகள் கொலஸ்ரோலை கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுப்ப தற்கும் இருதய சத்திர சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் காத்திருப்பவர்களுக்கும் மற்றும் சத்திர சிகிச்சையின் பின்பு மீண்டும் இரத்த நாடிகள் அடைபடாமல் இருப்பதற்காகவும் பாவிக்கலாம். இந்தக் காடியக் டானிக்குகள் பக்க விளைவுளை உண்டு பண்ணுவது இல்லை."

அத்துடன் உங்களது உடல் நிறையை குறைப்பதும் முக்கியம். இதற்காக வேண்டி சிறுநீரகம் சரல் போன்ற உறுப்புக்களின் தொழிற்பாடுகளையும் கொலஸ்ரோலின் அளவு குறைதள் எனவும் சிகிச்சைக்கு முன்பும் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் போதும் சில வாரங்களிலும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வோம். 

Post a Comment

0 Comments