Ticker

6/recent/ticker-posts

நாய் கடித்த சிறுமி சாகும் முன் 40 பேரை கடித்த சம்பவம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!


உத்தரபிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் உள்ள கியோலாரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி தெருநாய் கடித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 


இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த 2 வாரத்துக்குள் அந்த சிறுமி சுமார் 40 பேர் வரை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேபிஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்த கிராமமே அரண்டு போயுள்ளது. 

கியோலாரி கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் சிறுமி சென்று இருந்தபோது, தெருநாய் ஒன்று அவரை கடித்தது. ஆனால் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், உள்ளூரில் உள்ள வேட்டைக்காரரிடம் சென்று காட்டி மருந்து கொடுத்ததாக தெரிகிறது. மேலும் வெறி நாய் கடித்ததால் ஏற்பட்ட அறிகுறிகளை குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.மேலும் சிறுமி தன்னைச் சுற்றியுள்ளவர்களை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளாள். சிறுமியைக் கடித்த அந்த நாய் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறியுள்ளனர், இதனால் ரேபிஸ் பரவும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். சிறுமியை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து உயர்தர சிகிச்சைக்காக ஜான்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமியை காப்பாற்ற முயற்சித்த போதிலும், கடந்த திங்கள்கிழமை சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதனையடுத்து சிறுமியால் கடிக்கப்பட்ட கிராம மக்களும் உறவினர்களும் கடும் பீதியடைந்தனர். தங்களுக்கும் ரேபீஸ் நோய் பரவிவிடுமோ என பயந்துள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தடுப்பூசி கைவசம் இருப்பதாகவும், அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

zeenews


 



Post a Comment

0 Comments